Madras high court news feb 18. ஐகோர்ட் உத்தரவுகள் பிப் 18

[ [2/18, 09:05] Sekarreporter 1: https://youtu.be/B2f3oKkiymc
[2/18, 10:48] Sekarreporter 1: [2/18, 10:42] Inbadurai Mla: *நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினருக்கு ஆதரவாக கோவை மாவட்ட காவல்துறையினர் செயல்படுவதால் தேர்தலை நியாயமாக நடத்த மத்திய அரசின் துணை ராணுவப் படை பாதுகாப்பை வழங்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்!*

*சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த முருகேசன் வழக்கு!*

*மதியம் 2 மணிக்கு அசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தலைமை நீதிபதி அனுமதி!*
[2/18, 10:48] Sekarreporter 1: 🌹
[2/18, 12:18] Sekarreporter 1: ilayaraja got stay order in mhc court division bench against eco recording adv saravanan interview https://sekarreporter.com/ilayaraja-got-stay-order-in-mhc-court-division-bench-against-eco-recording-adv-saravanan-interview/
[2/18, 12:24] Sekarreporter 1: https://youtu.be/1dZLeeZJe3I
[2/18, 12:29] Sekarreporter 1: https://youtu.be/GohK5zuehC0
[2/18, 12:29] Sekarreporter 1: https://youtu.be/X4rRQ8pmRgA
[2/18, 14:09] Sekarreporter 1: https://youtu.be/JVHsyMi0uZA
[2/18, 14:23] Sekarreporter 1: இரு தரப்பால் ஒத்துக் கொள்ளப்பட்ட ஆவணங்களை சாட்சியை விசாரிக்காமல், வழக்கின் ஆவணங்களாக குறியீடு a செய்யலாம். (ADJCJ) A.D.JAGADISH CHANDRA
294 Crpc – R.vivekananthan madras high court.
[2/18, 14:50] Sekarreporter 1: [2/18, 14:24] Sekarreporter 1: Please refer any offer for junior if available
[2/18, 14:47] Sekarreporter 1: Sir, I need a junior
[2/18, 14:47] Sekarreporter 1: Sir, I need a junior
[2/18, 14:47] Sekarreporter 1: Tax advocate
[2/18, 14:48] Sekarreporter 1: Salary evolu kudupenga
[2/18, 14:49] Sekarreporter 1: 10k
[2/18, 14:49] Sekarreporter 1: If regular n good drafting and representation,i will increase after 1 or 2 month
[2/18, 16:42] Sekarreporter 1: https://youtu.be/tpQLv2XdhM8
[2/18, 17:29] Sekarreporter 1: Sekarreporter 1: 🌺🌺🌹🌹 [2/18, 17:22] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1494640902043619330?t=p52M0cVbUVSOF9YQNs9NQg&s=08 [2/18, 17:22] Sekarreporter 1: [2/18, 17:20] Sekarreporter 1: [2/18, 17:19] Sekarreporter 1: Congrats prabakaran sir again elected all India bar council vice chairman [2/18, 17:20] Sekarreporter 1: 🌹🌹🌹🌺🌺 [2/18, 17:21] Sekarreporter 1: Please Send short notes regarding prabakaran sirs achievements in judiciary dedicated service to lawyers always hardwok https://sekarreporter.com/sekarreporter-1-%f0%9f%8c%ba%f0%9f%8c%ba%f0%9f%8c%b9%f0%9f%8c%b9-2-18-1722-sekarreporter-1-https-twitter-com-sekarreporter1-status-1494640902043619330tp52m0cvbuvsof9yqns9nqgs08-2-18-172/
[2/18, 18:25] Sekarreporter 1: On behalf of the Bar Council of Tamilnadu and Puducherry and on behalf of the entire legal fraternity, we wholeheartedly congratulates you for being re-elected as the Vice-Chairman of the Bar Council of India and we have no words to express our happiness https://sekarreporter.com/on-behalf-of-the-bar-council-of-tamilnadu-and-puducherry-and-on-behalf-of-the-entire-legal-fraternity-we-wholeheartedly-congratulates-you-for-being-re-elected-as-the-vice-chairman-of-the-bar-council/
[2/18, 19:46] Sekarreporter 1: [2/18, 18:52] Kalaivani Advt: No person can be forcibly vaccinated without consent.

Court order copy pdf iruka ?
[2/18, 19:42] Sekarreporter 1: Sc order ullathu
[2/18, 19:42] Kalaivani Advt: Ok send sir
[2/18, 19:45] Sekarreporter 1: Not have
[2/18, 20:40] Sekarreporter 1: [2/18, 20:37] Join Secretry Admk Legal Wing Suriyanarayanan: Thalaivar V. S. Sethuraman legal wing now in party office for Election duty
[2/18, 20:38] Sekarreporter 1: Super
[2/18, 20:42] Sekarreporter 1: [2/18, 20:41] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1494691028376317952?t=ph5GiwinqIDcRZc6FOiqNw&s=08
[2/18, 20:41] Sekarreporter 1: [2/18, 20:37] Join Secretry Admk Legal Wing Suriyanarayanan: Thalaivar V. S. Sethuraman legal wing now in party office for Election duty
[2/18, 20:38] Sekarreporter 1: Super
[2/18, 21:58] Sekarreporter 1: Election case full order of THE HON’BLE MR. JUSTICE M.DURAISWAMY AND THE HON’BLE MRS.JUSTICE T.V.THAMILSELVI W.P.Nos.3785, 3801, 3802 of 2022 and W.M.P.No.3913 of 2022 in W.P.No.3785 of 2022 and W.M.P.Nos.3926 of 2022 in W.P.No.3801 of 2022 W.P.No.3785 of 2022 G.Raghupathi .. Petitioner Vs. 1.The Secretary to Government, Ministry of Home Affairs, Government of India, North Block, New Delhi – 110 001. 2.Tamil Nadu State Election Commission, 206/N, Jawaharlal Nehru Road, Jai https://sekarreporter.com/election-case-full-order-of-the-honble-mr-justice-m-duraiswamy-and-the-honble-mrs-justice-t-v-thamilselvi-w-p-nos-3785-3801-3802-of-2022-and-w-m-p-no-3913-of-2022-in-w-p-no-3785-of-2022-and-w/

2/18, 11:23] Sekarreporter 1: மரக்காணம் கலவரத்தின்போது ஏற்ப்பட்ட இழப்பை வசூலிக்க தடையில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.மணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது்

கடந்த 2013இல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரை திருவிழாவின்போது ஏற்பட்ட மரக்காணம் கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேதத்தின் இழப்பை வசூலிப்பது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே மணிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி 2014இல் வழக்கு தொடர்ந்தார். அதில், கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டதாகவும், அரசியல் உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கலவரத்தின் போது 58 பேருந்துகள் சேதம் அடைந்ததாகவும், பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி, பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், நிதி இழப்பு ஏற்படுத்தினாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீட்டை வசூலிக்க எவ்வித தடையும் இல்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டார். அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, நோட்டீசை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.
தனி நீதிபதி இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி. கே.மணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோருடைய அமர்வு வரும் திங்கட்கிழமை ஒத்திவைத்துள்ளது.
[2/18, 12:25] Sekarreporter 1: இளையராஜா வின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது.

ஒப்பந்தம் முடிந்த பிறகும்
காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் ,அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்…
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமத், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனத்துக்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார் இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதி எம்.துரைசாமி நீதிபதி தமிழ்ச்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும் இதற்கு உரிய காப்புரிமை பெறவில்லை என்றும் வாதிட்டார்..
தனி நீதிபதி சட்டத்தின் பிரிவு 14ல் “பதிப்புரிமை” என்பதன் பொருளைப் பரிசீலிக்க தவறிவிட்டார் என்றும், இசைப் பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது “எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு” பிரத்தியேக உரிமையாகும் என்று குறிப்பிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ,தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்து இது குறித்து சம்பந்தப்பட்ட இசை நிறுவனம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
[2/18, 13:15] Sekarreporter 1: தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி கிராவல் அள்ளிய புகாரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் உள்ளிட்ட 11 அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதியப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது.

தேனி மாவட்டம்,
உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து, அனுமதியின்றி, 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கனிம வளத் துறையை சேர்ந்த 5 அதிகாரிகள், வருவாய்த் துறையை சேர்ந்த 6 அதிகாரிகள் மற்றும் ஒரு தனி நபர் என 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் அன்னபிரகாசம், வருவாய்த் துறை மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ஞானராஜன் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
[2/18, 15:08] Sekarreporter 1: நீலகிரி மலை ரயில் பாதையில், யானைகள் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் மற்றும் கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக வனத்துறையும், ரயில்வே துறையும், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து பேசி உரிய நடைமுறைகளை வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, நீலகிரி மலை ரயில் பாதையில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் இடிக்கப்பட்டு விட்டதாகவும், கட்டிட இடிபாடுகள் இன்னும் அகற்றப்படவில்லை என தமிழக முதன்மை தலைமை வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார்.

மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, கட்டிட இடிபாடுகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் அப்புறப்படுத்துவது தொடர்பாக வனத்துறையும், ரயில்வே துறையும், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து பேசி உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பின்னர், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக வன பயிற்சி கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் மற்றும் வைகை அணை நக்ஸல் தடுப்பு படை கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்க வனத்துறை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ கண்காணிப்பாளர் நிர்மலாதேவி, ஐந்து வழக்குகளை விசாரித்து இரு வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து கேரள வனத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/18, 15:58] Sekarreporter 1: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றிய அண்ணா பொது தொழிலாளர் சங்க உறுப்பினர்கள், பணி நிரந்தரம் கோரி உரிய ஆவணங்களை மின் வாரியத்துக்கு வழங்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அதை ஆறுவாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க மின்வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த 21 ஆயிரத்து 600 ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதுசம்பந்தமான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அண்ணா பொது தொழிலாளர் சங்கம், ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டது. மற்ற தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டதால் 2007ம் ஆண்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கள் சங்க உறுப்பினர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் எழுப்பப்பட்ட பிரச்னை, தொழிலாளர் தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்து 2017ல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கதிர்வேல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி எம்.கோவிந்தராஜ் விசாரித்தார்.

அப்போது மனுதாரர் சங்கம் தரப்பில், 2007ம் ஆண்டு ஒப்பந்தத்தில் தங்கள் சங்கம் கையெழுத்திடாததால், அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி பணி நிரந்தரம் கோர தங்களுக்கு உரிமையுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த 2007ம் ஆண்டு ஒப்பந்தத்தை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், மனுதாரர் சங்கம் எந்த நிவாரணத்தையும் கோர முடியாது என மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளதால் இந்த ஒப்பந்தம், மனுதாரர்களை கட்டுப்படுத்தும் எனவும், எந்த நிவாரணமும் கோர முடியாது எனவும் கூறி, தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், மனுதாரர் சங்கத்தில் பல உறுப்பினர்கள், ஐந்து ஆண்டுகள் பணி உள்ளிட்ட மின்சார வாரியம் நிர்ணயித்துள்ள தகுதியை பெற்றுள்ளதால், உரிய ஆவணங்களை நான்கு வாரங்களில் மின்சார வாரியத்திடம் வழங்க வேண்டும் எனவும், இதை ஆறு வாரங்களில் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மின்சார வாரியத்துக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
[2/18, 16:32] Sekarreporter 1: சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையனுக்கு பரோல் வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் ஈரோட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கு ஒன்றில் 1987ஆம் அண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதித்து 1997ஆம் ஆண்டு ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி 34 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்தபோது, தந்தை மாதையனையும் விடுவிக்கக் கோரி அவரது மகள் ஜெயம்மாள் கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் முன் கூட்டி விடுதலை செய்ய அரசு மறுத்த நிலையில், தன் தந்தையின் இதய நோய் கோளாறுக்கு சிகிச்சை பெற 30 நாட்கள் பரோல் கேட்டு ஜெயம்மாள் விண்ணபித்துள்ளார்.

அந்த மனு மீது எந்த பதிலும் இல்லாத நிலையில், தந்தைக்கு 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயம்மாள் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழக உள்துறை செயலாளர், சிறைத் துறை டிஜிபி, சேலம் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
[2/18, 17:55] Sekarreporter 1: கோவையில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் தேர்தல் நியாயமாக நேர்மையாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் உறுதிமொழியை ஏற்று புதிய உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கோவையைச் சேர்ந்த ஆர். முருகேசன் மற்றும் 23 வது அதிமுக வேட்பாளர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும்
நேர்மையாகவும் நடத்த கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,அமைதியான கோவை மாவட்டத்தை ஆளும் கட்சியான திமுக கலவர பூமியாக மாற்றிவிட்டதாகவும், எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில் செயல்
படுவதாக தெரிவித்திருந்தனர்..

திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வெளிப்படையாக பண பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும்
எனவே
ஆளுங்கட்சியின் தலையீடு இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த ஏதுவாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பாரா மிலிட்டரி படையை பாதுகாப்புக்காக பணியமர்த்த வேண்டும் என்றும், வாக்கு பதிவு மையங்கள், வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் முக்கியமான இடங்கலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படவேண்டும் ,கட்சி சார்பற்ற தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் மற்றும் வாக்குப் பெட்டி வைக்கும் வரை பாதுகாக்கப்பட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி,தமிழ்செல்வி நீதிபதி அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் கரூர் மற்றும் சென்னையில் இருந்து கோவைக்கு ஆட்கள் வந்து உள்ளதாகவும், பாரா மிலிட்டரி போலீசார் பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும் என்று கேட்டுகொண்டனர்.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்,
ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,
தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
டிஜிபி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், 29 இடங்கள் பதட்டமான பகுதிகள் கண்டறியப்பட்டு, 1200 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பாடமல் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். உள்துறை சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு உரிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த வாதங்களைப் பதிவு செய்து கொண்ட
நீதிபதிகள், ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் புதிய உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...