Madras high court news

    [9/6, 11:23] Sekarreporter: அரசு துறைகளில் அனைத்து ஆவணங்களில் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், திருமணம், பூ புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரை குறிப்பிடும் நிலையில் அரசு ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவன் கல்வி ஆவணங்கள், இருப்பிட சான்று மற்றும் சாதி சான்று, வருமான சான்று பூர்வீக சான்று பெருவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடபடுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

    இந்திய அரசியல் சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்கபட்டுள்ள நிலையில் சமீபத்தில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர்கள் கேட்கபடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    திருமணம் ஆகாத கணவனை இழந்த பெண்கள் செயற்கை முறையில் குழந்தைகள் பெற்றும் கொள்ளும் போது தந்தை குறித்த விவரங்கள கோர முடியாது என்றும் நாட்டை தாய்நாடு மற்றும் மொழியை தாய்மொழி, நதியை பெண்களில் பெயரில் அழைக்கும் சூழலில் அனைத்து அரசு துறை ஆவணங்களில், விண்ணப்பங்கள் சான்றிதழ்களில் தாய் பெயரை குறிப்பிடும் வகையில் உரிய திருத்த கொண்டு வர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

    இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆறுவார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.
    [9/6, 12:05] Sekarreporter: விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உரிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு கடந்த ஆண்டை போலவே கோவில்கள் முன் வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது.

    கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி விநாயகர் சிலை ஊர்வலகங்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து இருந்தது.

    வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட்டு கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.

    இந்தநிலையில் இந்து முன்னேற்ற கழக திருப்பூர் தலைவர் கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு வகுத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

    இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு தலைமையிலான முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, கொரனா பரவல் காரணமாக மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு தடை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டை போலவே வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகளை சிறிய கோவில்களின் முன்பு வைக்கவும், அந்த சிலைகளை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீர்நிலைகளில் கரைப்படும் என்று தெரிவித்தார்.

    அரசின் இந்த பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
    [9/6, 12:27] Sekarreporter: மூத்த குடிமக்களின் முதலீடுகளுக்கான வட்டியை குறைத்ததை எதிர்த்த வழக்கில் எந்த உத்தரவு பிறப்பிக்க இயலாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

    மூத்த குடிமக்கள் முதலீடுகளுக்கான வட்டியை குறைத்ததை எதிர்த்து வழக்கறிஞர் கார்த்திகா அசோக் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அந்த மனுவில், கொரோனாவுக்கு முன் மூத்த குடிமக்களின் டிபாசிட்களுக்கு 8.5 முதல் 9 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்ததாகவும், கொரோனாவுக்கு பின் இந்த வட்டித்தொகை 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, எந்த வருமானமும் இல்லாத மூத்த குடிமக்கள், இந்த டிபாசிட்கள் மூலம் கிடைக்கும் மாத வட்டியை மட்டுமே நம்பி வாழ்வதாக மனுதாரர் வாதிட்டார்.

    இதையடுத்து, மூத்த குடிமக்கள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மூத்த குடிமக்கள் டிபாசிட்களுக்கு எவ்வளவு வட்டி வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

    அதேசமயம், இந்த முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
    [9/6, 15:00] Sekarreporter: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை சீரமைக்கவும், கோவில் பராமரிப்புக்கு தொகுப்பு நிதியும் உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, ஆட்சியர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.

    கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டுமான பணிகளுக்கு தடை விதித்ததுடன், நிலத்தை மதிப்பீடு செய்ய இரு குழுக்களை நியமித்தது.

    இவ்விரு குழுக்களின் மதிப்பீடும் குறைவாக உள்ளதாக மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் குறிப்பிட்ட போது, ஆறு மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த பின்னணியில் வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதிப்பீட்டாளர்களை கண்டுபிடிக்க இயலவில்லை என மனுதாரர் தெரிவித்தார்.

    இதையடுத்து, கோவில் நிலத்தை சுதந்திரமாக மதிப்பீடு செய்ய ஏதுவாக, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோவில் அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    முன்னதாக, சிதிலமடைந்த கோவிலை சீரமைக்கவும், கோவில் பராமரிப்புக்காக தொகுப்பு நிதி உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    மேலும், நிலத்துக்கான இழப்பீட்டை முதலில் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், நீதிமன்ற அனுமதியின்றி, கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
    [9/6, 19:28] Sekarreporter: W.P.No.18588 of 2021
    THE HON’BLE CHIEF JUSTICE
    and
    P.D.AUDIKESAVALU, J.
    (Order of the Court was made by the Hon’ble Chief Justice)
    The petition seeks a direction on the respondent authorities to
    provide for the name of the mother to be indicated in an application
    in addition to the name of the father. However, it may be more
    appropriate that if the column or columns in the printed forms permit
    either or both as per the wishes of the applicant.
    2. Mr.R.Rajesh Vivekananthan, learned Central Government
    Standing Counsel, appears and takes notice on behalf of respondent
    Nos.1 to 3. Mr.P.Muthukumar, learned State Government Pleader,
    takes notice on behalf of respondent Nos.4 to 6.
    3. Counter-affidavits should be filed within four weeks from
    date. The matter will appear six weeks hence.
    List on 01.11.2021.
    (S.B., CJ.) (P.D.A., J.)
    06.09.2021
    sra
    __________
    Page 1 of 2
    http://www.judis.nic.in

You may also like...