Madras high court 10 orders news ஐகோர்ட் நியூஸ் october 27th day

[10/26, 13:06] Sekarreporter: வரும் 2021-22 ம் கல்வியாண்டில் பி.ஆர்க் படிப்புக்கு நாட்டோ (NATO) அல்லது ஜெ.இ.இ. (JEE) நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களை, பி.ஆர்க் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு நாட்டோ அல்லது ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த நடைமுறை கடந்த ஆண்டு (2020- 21) வரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், வரும் 2021-22ம் கல்வியாண்டில் பி.ஆர்க் படிப்புக்கான கொள்கை விளக்க குறிப்பில் நாட்டோ நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இதை எதிர்த்து அகடமிக் சொசைட்டி ஆப் ஆர்க்கிடெக்ட் என்ற அமைப்பும், மெய்யம்மை என்ற மாணவியும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

பிற மாநிலங்களில் ஜெ.இ.இ. தேர்வு எழுதியவர்களும் பி.ஆர்க் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் நாட்டோ தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த மனுவுக்கு விரிவாக விளக்கமளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.

அதேசமயம், பி.ஆர்க் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று துவங்க உள்ளதால், நாட்டோ மற்றும் ஜெ.இ.இ. தேர்வில் தகுதி பெற்றவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் தேர்வு என்பது இந்த வழக்கின் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் உத்தரவிட்டார்.

ஜெ.இ.இ. தேர்வில் தகுதி பெற்றவர்களால் ஆன் லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாததால், ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க அனுமதித்து, கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[10/26, 13:34] Sekarreporter: அறியாமையையும், தனிமையையும் பயன்படுத்தி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, அவர்களை தவிர வேறு சாட்சியங்களை எதிர்பார்க்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு அப்பகுதியை சேர்ந்த ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூபன் தொடர்ந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூபன் தரப்பில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று அந்த இடத்தில் இல்லை என்றும், சிறுமியை தவிர வேறு சாட்சியங்கள் யாரும் இல்லாத நிலையில் தனக்கு தண்டனை வழங்கப்பட்டது தவறு என்று
வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் இதே சிறுமியிடம் ஏற்கனவே தவறாக நடக்க முயற்சித்ததாகவும், சிறுமி அளித்த வாக்குமூலம் தெளிவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த தீர்ப்பில், குழந்தைகளின் அறியாமையையும், தனிமையுயும் பயன்படுத்தி குற்றவாளிகள் செயல்படும் இதுபோன்ற சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களை தவிர வேறு நேரடி அல்லது தனிப்பட்ட சாட்சியங்களையோ எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் தெளிவாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொண்ட கோவை நீதிமன்ற தீர்ப்பு சரியானது எனக் கூறி, அதை எதிர்த்த ரூபனின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[10/26, 15:04] Sekarreporter: 2019ல் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து தென்னிந்திய நடிகர் சங்கம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்றும், தீர்ப்பளித்தது. மேலும், மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்தும் 2020 ஜனவரியில் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வு முன்பு கடந்த வாரம் விசராணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓம்.பிரகாஷ் மற்றும் கபீர், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வாக்கு பெட்டிகளில் வைக்கபட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர். தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளதாகவும், மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாதிட்டிருந்தார்

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சிறப்பு அதிகாரி கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாகவும், அவர், சங்கத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பணியை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இன்று மீண்டும் விசாணைக்கு வந்தபோது எழுமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ், நடிகர் சங்க தேர்தல் நடத்தபட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாகவும், சங்க உறுப்பினர்களின் இறுதி பட்டியலை உறுதிபடுத்தவில்லை எனவும், சென்னை மாவட்ட பதிவாளர் தயார் செய்த உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் வேண்டும் என தெரிவித்தாக வாதிட்டார். எனவே நடிகர் சங்க உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்து புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
[10/26, 16:49] Sekarreporter: சென்னையில் உள்ள வில்லோஸ் ஸ்பாவின் உரிமையாளர் ஹேமா ஜூவானி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னையில் பல இடங்களில் தங்களுக்கு மசாஜ் சென்டருடன் கூடிய அழகு நிலையங்கள் உள்ளதாகவும்,.அவற்றில் அடிக்கடி காவல்துறையினர் தொந்தரவு செய்வதாக  தொடர்ந்திருந்த வழக்கில், ஆதாரம் இல்லாமல் காவல்துறையினர் தொந்தரவு செய்ய கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தாம்பரத்தில் உள்ள தங்களது கிளையில், பாலியல் தொழில் நடைபெறுவதாக பொய் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் பணம் கேட்டு மிரட்டுவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தாம்பரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

இதையடுத்து,
ஸ்பா மற்றும் மசாஜ் நிலையங்களை விபச்சார தொழில் புரியும் இடம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்ப்பீர்களா என காவல்துறைக்கு கேள்வி எழுப்பியதுடன், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மிரட்டும் நோக்கில் செயல்படக் கூடாது என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[10/26, 17:49] Sekarreporter: மருத்துவர்கள் மீதான புகார்களை 6 மாதத்திற்குள் முடிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மலர் மருத்துவமனையில் பிச்சுமணி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 27ல் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பலனளிக்காததால், அக்டோபர் 11ல் இறந்துள்ளார்.

இதற்கிடையில் தன் தந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கோவையை சேர்ந்த மருத்துவர் ராதாகிருஷ்ணன் போலியாக மருத்துவ தகுதி சான்று கொடுத்து, அவருடைய மருமகன் பெயரில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பதிவு செய்ததாக பிச்சுமணியின் மகள் ஸ்ரீசுபிதா தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் புகார் அளித்திருந்தார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் மீதான புகாரில் விசாரணைக்கு சாட்சி சொல்வதற்காக, மருத்துவமனையின் முதன்மை மருத்துவ ஆலோசகராக இருந்த பாசுமணியை அழைத்து, அவரின் பதிவை 6 மாதங்களுக்கு நீக்கி மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பாசுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து தீர்ப்பளித்துள்ளார்.

பாசுமணிக்கு எதிராக மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்படவில்லை என்றும், சாட்சியமளிக்க மட்டுமே சென்ற நிலையில், தவறான தகவல் தெரிவித்ததாக கூறி, அவர் விளக்கம் அளிக்கக்கூட வாய்ப்பளிக்காமல் பதிவை ரத்து செய்த உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் என்பது தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்ட பிறகும், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான புதிய விதிகள வகுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

நடவடிக்கை எடுப்பதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டுமெனவும், மருத்துவர்களுக்கு எதிராக புகார் வந்தால் சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் பெற்று, விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அந்த குழு சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விளக்கம் கேட்டு முடிவெடுக்க்ய்ம் வகையில், 3 நபர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், மருத்துவர்களுக்கு எதிராக எந்த ஒரு புகாராக இருந்தாலும் 6 மாதத்தில் விசாரணை முடிக்கும் வகையில் அக்குழுவிற்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புகார் தொடர்பான மருத்துவ ஆவணங்களை 3 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் என்ற காலவரையறையை 10 ஆண்டுகளாக நீட்டித்தும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.
[10/26, 18:19] Sekarreporter: கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து காவல் ஆய்வாளர் செல்லமுத்து தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2003-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தைச் சார்ந்த முருகேசன் – கண்ணகி ஆகிய இருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இருவரையும் கண்டுபிடித்து கொண்டு வந்து புதுக்கூரைப்பேட்டை முந்திரித்தோப்பில் இருவருக்கும் விஷம் கொடுத்து எரித்து கொலை செய்துள்ளனர்.

இது குறித்து, விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 2004 ம் ஆண்டு முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து, கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டியன், ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கண்ணகியின் அண்னன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனையும், கண்ணகியின் தந்தை துரைசாமி, ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 12 பேருக்கு ஆயுள் தண்டணையும் விதித்து கடந்த செப்டம்பர் 24 ம் தேதி தீர்ப்பளித்தது

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரி அப்போதைய காவல்துறை ஆய்வாளர் செல்லமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,
தான் குற்றவாளி என நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதால் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென கோரியுள்ளார்

2003 ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு 17 ஆண்டுகள் கழித்து, 49 சாட்சிகளை விசாரித்து முடித்த பின்னர், கடந்த 2020 ம் ஆண்டு தான் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாகவும், 29 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதால் சிபிஐ யின் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என தெளிவாகியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஸ்ரீமதி அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களில் சி.பி.ஐ பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது
[10/26, 19:56] Sekarreporter: உச்ச நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வீட்டுக்கு சென்னை மாநகராட்சி வைத்த சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மன்சூர் அலிகானின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கு பகுதி உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீடு அரசு புறம்போக்கு நிலம் 2,400 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டியிருப்பதால் மாநகாட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்சூர் அலிகானின் மனைவி அபிதா பானு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 18 ஆண்டுகளுக்கு முன் 2400 சதுர அடி நிலத்தை அப்பாவு மற்றும் அவரது மகன் பாரி ஆகியோர் தன்னிடம் விற்று விட்டதாகவும், பிறகு அது அரசு புறம்போக்கு நிலம் என தெரியவந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீட்டை காலி செய்யக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், சீராய்வு மனு தாக்கல் செய்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 21 ஆம் தேதி எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் வீட்டைவிட்டு தாங்கள் வெளியேற்றப்பட்டது சட்டவிரோதம் எனவும் தெரிவித்துள்ளார். வீட்டில் தங்களுடைய உடமைகளை மட்டுமல்லாமல், இரணடு வெளிநாட்டு பூனைகளையும் வைத்து அதிகாரிகள் பூட்டி விட்டதால், அவை உணவின்றி தவிப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் வைத்த சீலை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர உள்ளது.
[10/27, 06:52] Sekarreporter: தாய், தந்தை, சகோதரன் ஆகியோரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மூத்த மகன் (அதிமுக மாணவரணி நிர்வாகி), மருமகள் ஆகியோருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பாராயன் தெருவை சேர்ந்த ராஜு திண்டிவனத்தில் தொழிற்கூடம் நடத்தி வந்த நிலையில், அவரது மனைவி கலைச்செல்வி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவர்களின் மூத்த மகன் கோவர்த்தனன் திண்டிவனம் நகர அதிமுக மாணவரணி தலைவர் மற்றும் நகர ஐ.டி. பிரிவு செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்த நிலையில், தீபாகாயத்ரி என்பவரை மணமுடித்துள்ளார். இளைய மகன் கௌதமனுக்கு திருமணமாகாத நிலையில், குடும்ப தொழிலை பார்த்து வந்துள்ளார்.

புதிய தொழில் தொடங்க பணம் கேட்டு குடும்பத்தினரை கோவர்த்தனன் நச்சரித்தும், பணம் கொடுக்காததால் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2019 மே 15ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ராஜுவின் பங்களா வீட்டில் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கதில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு மூடப்பட்டு நிலைய்ல், தொடர்ந்து அலறல் சத்தமும், நெருப்பும் புகையும் வந்ததால் அக்கம் பக்கத்தினர் வாசல் கதவை உடைத்து திறந்து சென்று பார்த்த போது ராஜு, கலைச்செல்வி, கௌதமன் ஆகியோர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர்.

ஏசி பெட்டி வெடித்து தனது அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் இறந்து விட்டதாக கோவர்த்தனன் அனைவரிடமும் கூறி, திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையிலான புலன் விசாரணையில், மூவரையும் கோவர்த்தனனும், அவரது தீபகாயத்திரியும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ள விஷயம் கண்டுபிடிக்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிக்குண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணை நடைபெற்றபோது, காவல்துறை தரப்பில் 19 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 35 ஆவணங்கள் மற்றும் 17 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பி.வேல்முருகன், குற்றம்சாட்டப்பட்ட கோவர்த்தனன் மற்றும் தீபகாயத்ரி ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்தார். இந்த வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறிவிட்டாலும், சூழ்நிலை சாட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கை, ரசாயன பகுப்பாய்வு அறிக்கை ஆகியவற்றை வைத்து எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
[10/27, 06:53] Sekarreporter: 500 கோடி இழப்பீடு கேட்டு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜவை சேர்ந்த செல்வக்குமார் ஆகியோருக்கு பிஜிஆர் எனர்ஜி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

எண்ணூர் அனல் மின் நிலைய் டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக பி. ஜி.ஆர்., என்ர்ஜி நிறுவனம் வழக்கு தொடர்ந்து ஏப்ரல் 28ஆம் தேதி இடைக்கால உத்தரவு பெற்றிருந்தது.இந்நிலையில் பாஜகவை சேர்ந்த செல்வக்குமார் ((காயத்திரி ரகுராம் வீடியோவில் விசமம் செய்தவர்)) டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில் தனியார் நிறுவனத்திற்கு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மூலம் டான்ஜெட்கோ பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளதாக பதிவிட்டிருந்தார், இதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரீடிவீட் செயததுடன், இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில் தங்கள் நிறுவனத்தை பற்றி அவதூறு கருத்து பரப்பிய செல்வக்குமாரும், அதை ரீடிவீட் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 10 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமெனவும், 500 கோடி ரூபாய் மாப் நஷ்ட இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் கூறி பி.ஜி.ஆர்.என்ர்ஜி சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடும் வகையில் அமைந்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

You may also like...