Justices R. Suresh Kumar and A.D. Jagadish Chandira) said vendors can’t claim a right to set up shops on Marina Beach. The court limited the corporation to 300 stalls (food, toys, fancy goods) and, hearing 600-plus vendors seek to intervene, suspected a mafia

[05/03, 08:11] sekarreporter1: மெரினாவில் கடைகள் அமைக்க, உரிமையாக கேட்க முடியாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாபியா கும்பல் பின்னணியில் உள்ளதாக சந்தேகம் தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினாவில் உணவு பொருட்கள், பொம்மை கடைகள், பேன்சி கடைகள் என 300 கடைகள் மட்டும் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மெரினாவில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்த 600க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள், தங்களை இந்த வழக்கில் இணைக்க கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், கடற்கரைக்கு அருகில் உள்ள வியாபார மண்டலங்களில் கடைகள் ஒதுக்க வேண்டும். மெரினாவை வியாபார தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது. கேரளாவின் கோவளம், ஒடிசாவின் புரி, மும்பை மெரைன் டிரைவ் போன்ற கடற்கரைகள் சுத்தமாக பராமரிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினர்.

மேலும், நீதிமன்றம் தலையிடும் முன், மெரினா கடற்கரை, கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கடை உரிமையாளர்களிடம் மாமூல் வசூலித்து விட்டு, வழக்கில் தற்போது இணைக்க கோரி மனுத் தாக்கல் செய்ததன் பின்னணியில் மாபியா கும்பல் உள்ளதாக நீதிபதிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

முறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அழகான மெரினா கடற்கரையை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியாது. கடற்கரையில் கடைகள் அமைப்பதை உரிமையாக கேட்க முடியாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு துறைகள் மூலமும், தாங்களும் நேரில் ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் 300 கடைகள் மட்டும் அமைக்க உத்தரவிட்டதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இடையீட்டு மனுக்ககள் மீது பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.
[05/03, 08:11] Meta AI: மெரினா கடற்கரையில் கடைகள் வைப்பதை “உரிமை” எனக் கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் (நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா) கூறியது. நகராட்சிக்கு 300 கடைகள் மட்டும் அனுமதிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், 600-க்கும் மேல் கடைக்காரர்கள் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களில் மாபியா பின்னணி இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தது. கடற்கரையை வணிக மண்டலமாக மாற்ற முடியாது, எதிர்கால தலைமுறைக்கு சுத்தமான மெரினாவை விட்டுச்செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியது. இடையீட்டு மனுக்கள் மீது பின்னர் முடிவு கூறப்படும்.
[05/03, 08:11] Meta AI: The Madras High Court (Justices R. Suresh Kumar and A.D. Jagadish Chandira) said vendors can’t claim a right to set up shops on Marina Beach. The court limited the corporation to 300 stalls (food, toys, fancy goods) and, hearing 600-plus vendors seek to intervene, suspected a mafia hand behind the money-collection and petitions. Judges stressed Marina can’t be turned into a bazaar—citing clean beaches like Kovalam, Puri and Marine Drive—and said future generations deserve a clean shore. Orders on the intervention pleas will follow.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version