Judge Tickaraman order #ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யும் உரிமையை பெண் என்பதற்காக மறுக்கக்கூடாது

திருமணம் மற்றும் விவாகரத்து பெற்ற விவரங்களை ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யும் உரிமையை பெண் என்பதற்காக மறுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியை சேர்ந்த போரா முஸ்லீம் தம்பதிக்கு கடந்த 2005ம் ஆண்டு தாவூதி போரா முஸ்லீம் ஜமாத்தில் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் பிறந்த பின்னர், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடிதம் மூலம் 3 முறை தலாக் சொல்லி, அதை இமெயில் மற்றும் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமும் மனைவிக்கு கணவர் அனுப்பி வைத்தார், பின்னர், சென்னை கூடுதல் குடும்பநல நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கியது.
இதற்கிடையில், குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி கணவன் கேட்டபோது, இருதரப்புக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை சட்டத்தில் கீழ் கணவனுக்கு எதிராக மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், மனைவிக்கு மாதாந்திர பராமரிப்பு செலவாக 37 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தாக்கல் செய்த வழக்கை கூடுதல் அமர்வு நீதிமன்றம், தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கணவன் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். அதேபோல, தண்டனை அதிகரிக்க கோரி மனைவியும் தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகளை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. கணவன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கீதா ராமசேசன், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, மனைவிக்காக மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி
இந்த வழக்கில், மனைவிக்கு விவாகரத்து வழங்கியதை ஜமாத்தில் உள்ள பதிவேட்டில் பதிவு செய்யாமல், கணவர் 2வது திருமணம் செய்து கொண்டார். 2வது மனைவியின் மூலம் குழந்தையும் பிறந்துள்ளது. போரா முஸ்லீம் ஜமாத் விதிகளின்படி, விவாகரத்து ஆன தகவலை திருமண பதிவேட்டில் கணவன்தான் பதிவு செய்ய முடியும். மனைவிக்கு அந்த உரிமை கிடையாது என்று இந்த வழக்கில் மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ் வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி போரா முஸ்லீம் மத பழக்க வழக்கத்தை பற்றி எந்த ஒரு கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால், திருமணம் மற்றும் விவாகரத்து பெற்ற விவரங்களை ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யும் உரிமையை பெண் என்பதற்காக மறுக்கக்கூடாது ,
பதிவு செய்ய வேண்டும்
தனக்கு திருமணம் நடந்து விட்டது அல்லது விவாகரத்து வழங்கப்பட்டு விட்டது என்பதை அறிவிக்க ஒவ்வொரு பெண்ணிற்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை மறுக்கக்கூடாது. திருமணம் தொடர்பான சிவில் நீதிமன்ற உத்தரவு, ஜமாத்தை கட்டுப்படுத்தும்.
எனவே, குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின் படி, இந்த வழக்கில் மனைவிக்கு வழங்கப்பட்ட விவாகரத்து குறித்து சென்னையில் அமைந்துள்ள போரா முஸ்லீம் ஜமாத் பதிவேடேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
மாஜிஸ்திரேட் கோர்ட்டு தீர்ப்பை, மாவட்ட நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறி, 10 லட்சம் இழப்பீட்டு தொகையை 7.50 லட்சமாக குறைப்பதாக
நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...