Judge பவானி சுப்புராயன் உற்பத்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்கையாக உருவாக்கிய சிமெண்ட் தட்டுப்பாட்டை உண்டாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உற்பத்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்கையாக உருவாக்கிய சிமெண்ட் தட்டுப்பாட்டை உண்டாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கிளாஸ்-1 ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஆர். செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழகத்தில் சிமெண்ட் விலையேற்றம் சமீபகாலமாக உயர்ந்துள்ளதால், கொரோனா ஊரடங்கு காலத்தில், கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்கையாக தட்டுப்பாட்டை உண்டாக்கி, விலையை உயர்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமெண்ட் விலையை உயர்த்தி வரும் உற்பத்தியாளர்களின் கூட்டுச்செயல் பற்றி விசாரிக்க சிபி ஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சிமெண்ட் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யபட்ட பதில் மனுவில், சிமெண்ட் விலை உயர்வு குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு அதிகார வரம்பு இல்லை என்பதால், புகாரை தமிழக டிஜிபிக்கு அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, சிமெண்ட் விலை உயர்வு புகார் குறித்து தமிழக டிஜிபி விசாரணை நடத்தி 4 மாதத்தில் அறிக்கை தாக்கல் உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

You may also like...