Judge krishna kumar உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளுக்கு டெண்டர் கோரும் போது, ஊழல், முறைகேடு புகார்களை தவிர்க்க, டெண்டர் கோருவது, ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளுக்கு டெண்டர் கோரும் போது, ஊழல், முறைகேடு புகார்களை தவிர்க்க, டெண்டர் கோருவது, ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த பம்மல் நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தும் பணிக்கான டெண்டர் ஒதுக்கீட்டை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெண்டர் பெற்ற நிறுவனம் உரிய தகுதியை பெற்றிருக்கவில்லை எனவும், மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகள், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரும் போது ஒரே மாதிரியான நடைமுறைகளை பின்பற்றுவதில்லை எனவும், டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த டெண்டரில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய பின், டெண்டரை ரத்து செய்து மீண்டும் டெண்டர் கோர அவகாசம் வழங்க வேண்டும் என நகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு, புதிய டெண்டர் கோர அனுமதித்த நீதிபதி, உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் கோரும் போது, ஊழல், முறைகேடு புகார்களை தவிர்க்க டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளை பின்பற்ற அறிவுறுத்தினார்.

மேலும், டெண்டர் கோருவது, ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதி, டெண்டர் கோரும் போது, டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தல் பிறப்பிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...