Fake insurence case navj order
தமிழகம் முழுவதும் 105 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக 467 புகார்கள் மீது. சிறப்பு புலனாய்வு குழு விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
போலி இன்சூரன்ஸ் மோசடி குறித்து வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் போலி இன்சூரன்ஸ் மோசடி குறித்து விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, விசாரணையை தொடங்கப்பட்ட நிலையில்,
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட வேண்டும், மேலும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொடுத்த 105 கோடி ரூபாய்
இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக 467 புகார்கள் மீது இதுவரை போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லைை. எனவே எப்ஐஆர் பதிவு செய்து அதை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டது..
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் போலி இன்சூரன்ஸ் மோசடி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த தயாராக உள்ளது என்றார்.இதை கேட்ட நீதிபதி, தமிழகம் முழுவதும் 105 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக 467 புகார்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே இந்த புகார்கள் மீது உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும்,அந்த குழு விசாரிக்க வேண்டும் என்றும், ஓசூர் மோட்டார் வாகன விபத்து நீதிமன்றத்தில் 82 போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும்,
இதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்கள் கானாமல் போய்விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஆவணங்கள் எப்படி காணாமல் போனது என்பது குறித்து ஓசூர் நீதிமன்ற நீதிபதிகள் உரிய விசாரணை நடத்தி அதுகுறித்த அறிக்கையை அடுத்த மாதம் 17ம்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.