Dmk mp Raja case special court judge venkatavararhan order
சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி – ஆ.ராசா சென்னை எம்பி எம் எல் ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஆ.ராசா, கடந்த 1999 ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக, சிபிஐ, 2015 ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி என நான்கு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிரான இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேங்கடவரதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ.ராசா நேரில் ஆஜரானார்.
அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை, நவம்பர் 17 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.