Cvs case Adv Riyaz
உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்த மிரட்டல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய விழுப்புரம் மாவட்டம், ரோசணை காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 ம் ஆண்டு முதல் தனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இதுசம்பந்தமான வழக்குகளையும், புகார்களையும் சிபிஐக்கு மாற்றக் கோரி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்த போது, அச்சுறுத்தல் தொடர்பாக மொபைல் எண்களை குறிப்பிட்டு, ரோசணை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சி.வி.சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த புகார் மீது என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, ரோசணை போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.