அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் சொத்து மதிப்பு குறைந்திருந்தாலும், மனைவி பெயருக்கு சொத்துக்களை மாற்றியதை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் சொத்து மதிப்பு குறைந்திருந்தாலும், மனைவி பெயருக்கு சொத்துக்களை மாற்றியதை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடும் மதுரை திருமங்கலம் தொகுதியின் வாக்களரான கே. அழகுமலை கண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், 2021ல் போட்டியிட்டபோது 15 லட்சமாக இருந்த அசையும் சொத்துக்கள், தற்போது 10 லட்சத்து 50 ஆயிரமாக குறைந்திருப்பதாக கூறினாலும், அவரது மனைவியின் பெயரில் உள்ள அசையும் சொத்துக்கள் 11 லட்சம் ரூபாயிலிருந்து 14 லட்சம் ரூபாயாக அதிகரிதிருப்பதன்மூலம், குடும்ப உறுப்பினருக்கு சொத்துக்கள் விற்பனை, பரிமாற்றம், அடமானம் குறித்த தகவல் வெளிப்படுத்தப்படவில்லை; இது குடும்ப உறவுகளுக்குள்ளேயே சொத்துக்களை பகிர்வது அல்லது மாற்றம் செய்யும் போக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டினாலும், அதுகுறித்த தகவலும் அவணங்களில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

தனது நியாயமான குற்றச்சாட்டுகள் குறித்து ஏப்ரல் 7ல் அளித்த புகார் மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆர். பி. உதயகுமாரின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களில் உண்மை தகவல் மறைக்கப்பட்டது குறித்து வருமான வரித்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, தேர்தலுக்கு முன்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com