தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில ஆஜரான வழக்கறிஞர் எஸ் காஜா மொய்தீன்கிஸ்தி மத்திய அரசினுடைய கொள்கை முடிவு என்றும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவில் உயர் பாதுகாப்பு வாகன பதிவின் பலகை பொருத்த வேண்டும் என்று உத்தரிடப்பட்டதையும் சுட்டி காட்டினார்

2019 ஏப்ரல் மாதத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தமிழகத்தில் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை கட்டாயம் பொறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது…

அகில இந்திய மோட்டார் வாகன பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,
மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறையின் உத்தரவுக்கிணங்க 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பு தயாரிக்கப்பட்ட யவாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு வாகன பதிவெண் பலகை பொருத்த வேண்டும் என்பதை கட்டாயமாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்து. இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.. தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும் தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது .இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில ஆஜரான வழக்கறிஞர் எஸ் காஜா மொய்தீன்கிஸ்தி மத்திய அரசினுடைய கொள்கை முடிவு என்றும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவில் உயர் பாதுகாப்பு வாகன பதிவின் பலகை பொருத்த வேண்டும் என்று உத்தரிடப்பட்டதையும் சுட்டி காட்டினார் இதன் மூலம் வானத்தை அடையாளம் காணவும் குற்றங்களில் தடுக்கவும் சட்டவிரவாத நடவடிக்கைகள் வாகனங்களை பயன்படுத்தி தடுக்க உதவும் என்றும் வாதிட்டார்…
வழக்கை விசாரித்த நீதிபதிகள்
எந்தவொரு சட்ட உத்தரவும் இல்லாத நிலையில், மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் 1.4.2019 க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களில் கட்டாயமாக்க மாநிலத்திற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்…
குறிப்பாக மோட்டார் வாகன சட்டம் கட்டாயமாக்கவில்லை, ஆனால் அது விருப்பம் மட்டுமே என்பதால், மனுதாரர், மத்திய அரசை அணுகலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்..

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com