Today hearing sc K balu: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கத்தின் இணைத் தலைவர் வழக்கறிஞர் கே. பாலு, இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன் விசாரணைக்கு வரும் Writ Petition (Civil) No.581 of 2024-ல் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
[08/12, 09:53] K balu: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கத்தின் இணைத் தலைவர் வழக்கறிஞர் கே. பாலு, இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன் விசாரணைக்கு வரும் Writ Petition (Civil) No.581 of 2024-ல் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், பார் கவுன்சில் தேர்தல் முறையில் முழுமையான சீர்திருத்தம் மேற்கொண்டு பிராந்திய மற்றும் மாவட்ட அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தி அதில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில் அவசியமான திருத்தங்களை 1961 ஆம் ஆண்டு வழக்குரைஞர் சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில், மத்திய அரசும் மற்றும் அகில இந்திய பார்க்கவுன்சிலும் இணைந்து ஒரு கூட்டு முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தற்போதைய பார் கவுன்சில் தேர்தல் அமைப்பில் பிராந்திய, பகுதி அல்லது மாவட்ட அடிப்படையிலான பிரதிநிதித்துவம் இல்லாததால், நகர்ப்புறங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மட்டுமே பார் கவுன்சில் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. இந்த அடிப்படை குறையை சரி செய்யாமல் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது, மாநிலம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் நோக்கத்தை வீணாக்கும் அபாயம் உள்ளது என தனது மனதில் கூறியுள்ளார்
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வின் முன்பாக விசாரணைக்கு வர உள்ளது
[08/12, 09:59] Sekarreporter: 👍