RTE chief bench order Aag Ravinthiren

கோவையை சேர்ந்த ஈஸ்வரன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்களை கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும். இதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் இணைதளத்தை் திறந்து அதில் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதிப்பார்கள். இந்த 2025. 2026ம் ஆண்டு ஏழை மாணவர்கள் சேர இணைதளத்தை தமிழக அரசு திறக்கவில்லை. இதனால் ஏழைமாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் சேர தமிழக அரசு இணை தளத்தை திறந்துவிட கோர்ட் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இந்த ஆண்டுக்கான இணைதளம் திறக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை முடிந்துவிட்டது. இதுதொடர்பான வழக்கை நீதிபதி இளந்திரையன் விசாரித்து ஏழை மாணவர்கள் சேர்க்க கால கெடுவை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.இதனால் அக்டோபர் 30ம் தேதி வரை இளைதளம் திறக்கப்பட்டு மாணவர்கள் விண்ணப்பித்து தனியார் பள்ளிகளில் சேரந்துவிடடார்கள். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதை நீதிபதிகள் ஏற்று்ககொண்டு வழக்கை தள்ளுபடி செய்தனர். ஏழை மாணவர்கள் சேர தமிழக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்து கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்த்துவிடடதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்ற தீர்ப்பு கூறினர்.nshot_2025-09-02-11-07-24-55_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg” alt=”” width=”1079″ height=”973″ class=”alignnone size-full wp-image-44665″ />

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com