சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் Dr.M.V.சதீஷ் பேட்டி*
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் Dr.M.V.சதீஷ் பேட்டி*
JUSTICE FOR ALL …
VOICE OF ADVOCATE 🎤
*கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 40 பேருக்கும் தலா ரூ.1 கோடி வீதம் 40 கோடி வழங்குவது விஜய்க்கு பெரிய விஷயம் அல்ல*
*விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்*
*சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் Dr.M.V.சதீஷ் பேட்டி*
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கரூரில் நடிகர் விஜயின் பிரச்சாரத்தின்போது நடைபெற்ற விபத்து குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது…
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்…
விஜய் பிரச்சாரம் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களது வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். மேலும் மற்ற வழக்கறிஞர்கள் சங்கத்துடன் சேர்ந்து பெருவாரியான தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம்…
அரசியல் செய்யும் கட்சிகள் மேடைகள் போட்டு அரசியல் செய்யுங்கள், மக்களின் உயிர் மீது அரசியல் செய்ய வேண்டாம்…
அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு செல்லும் பொதுமக்களாகிய நீங்கள் தான் உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்…
நாங்கள் விஜய்யிடம் பேசுவதற்காகவோ, திமுக உடன் பேசுவதற்காகவோ இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தவில்லை. நாங்கள் மக்களிடம் பேசுவதற்காகவே இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துகிறோம்…
இந்த விபத்து குறித்த வழக்கை தமிழக அரசு தானாக முன்வந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் தனி நபர் ஆணையம் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. அதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். ஏற்கனவே உள்ள தனி நபர் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே…
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் சார்பில் ரூ.20 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் விஜயிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தல ஒரு கோடி ரூபாய் என 40 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அது இழப்பீட்டை ஓரளவிற்கு சமன் செய்யும் என அவர் தெரிவித்தார்…
“என்றும் உங்களில் ஒருவனாக”
*Dr.M.V.சதீஷ்*
(Commissioner of oaths)
Advocate Madras High Court
Executive Committee Member
ALL INDIA 🇮🇳 SEEDS OF Dr.B.R.
AmbedkarAdvocateAssociation 💫 .. NATIONAL SECRETARY.. 💫
South Chennai North …( East )
..DISTRICT SECRETARY..