Thiruparankundram hill case 3rd judge vijayakumar orders reserved

[08/09, 19:18] Sekarreporter: திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3வது நீதிபதியின் விசாரணை நிறைவடைந்துள்ளது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், 3வது நீதிபதிக்கு வழக்கு ஒதுக்கப்பட்டது.
[08/09, 19:19] Sekarreporter: அதன்படி, நீதிபதி விஜயகுமார் இந்த வழக்கை விசாரித்து மனுதாரர்கள், அரசு, தொல்லியல்துறை உள்ளிட்ட பல தரப்புகளின் வாதங்களை கேட்டறிந்தார். இந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
[08/09, 19:19] Sekarreporter: சில மாதங்களுக்கு முன்பாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுப்பதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழியுடன் ஏறக் கூடாது என்று காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது சர்ச்சையாக வெடித்தது. திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தமானது மற்றும் நில பயன்பாடு தொடர்பான வழக்குகள் உள்ளன.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com