Significant development Ilayaraja got stay in song issue judge senthil kumar for ilayaraja advts K Thiyakarajan and A Saravanan argued heated arguments
நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில், இளையராஜாவின் பாடல்களை
பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் அண்மையில் வெளியானது.
இந்த திரைப்படத்தில், இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், குட் பேட் அக்லி திரைப்படத்தில் தன்னுடைய அனுமதியில்லாமல் பயன்படுத்திய பாடல்களை அனைத்தையும் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இளைராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குட் பேட் அக்லி திரைப்படத்தில், இளைஞராஜாவின் பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், இளையராஜா பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியது குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் 2 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.

