Empty bottle mhc order nskj
Empty காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தினை வரும் நவம்பர் 30 தேதிக்குள் தமிழகம் முழுவதும் அமல்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெ
டு விதித்து உத்தரவிட்டுள்ளது.
வனம், வன விலங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது டாஸ்மார்க் நிறுவக இயக்குனர் விசாகன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் மது பாட்டில்கள் திரும்ப பெரும் திட்டம் 15 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் 7 மாவட்டங்களில் பாதி அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வேலூர், சேலம், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள 850 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தின் கீழ் 113 கோடியே 81 லட்சம் பாட்டில் விற்பனை செய்யபட்டதாகவும் அதில் 71 கோடியே 39 லட்சம் பாட்டில்கள் டாஸ்மாக் மூலமாகவும் 40 கோடியே 62 லட்சம் பாட்டில்கள் பார்கள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் 98.09 சதவீதம் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டது. மேலும் டாஸ்மாக் மது அனைத்தும் கணினி மயமாக்கபட்டுள்ளது. திரும்ப பெறும் மது பாட்டில்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்ததன் மூலமாக 17 கோடியே 86 லட்சம் ரூபாய் அரசிடம் இருப்பதாகவும் இந்த தொகையை தனி வங்கி கணக்கில் பராமரித்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக மது உற்பத்தி நிறுவனங்களுடன் கடந்த மாதம் ஆலோசனை செய்ததாகவும் இதில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றதாகவும் மற்ற நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. பாட்டில்களை திரும்ப பெறுவதில் சில நிறுவனங்கள் ஒத்துக் கொள்ளவில்லை எனவும் சில நிறுவனங்கள் கால அவகாசம் கோரியுள்ளது.
புதிய பார் ஏலம் விடும் பொழுதும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவதற்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அனைத்து மது பாட்டில்களும் கியூ ஆர் கோடு ஒட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தினை
நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கையிலும் எடுக்கப்பட்டு வருவதாகவும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் பொழுது அதில் நிர்வாக ரீதியாக ஏற்படும் சில மாற்றங்கள் செய்வதால் காலதாமதம் ஏற்படுவதாகவும் வேண்டும் என்று இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் கால தாமதம் செய்யவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை படித்துப் பார்த்த நீதிபதிகள், காலி மது பாட்டில் பெரும் திட்டத்தை செயல்படுத்த மேலும் கால அவகாசம் அளிக்க முடியாது என தெரிவித்தனர்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள் தமிழகம் முழுவதும் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தினை அனைத்து மாவட்டங்களில் வரும் நவம்பர் 30 தேதிக்குள் நடைமுறை படுத்த வேண்டும் என கெடு விதிப்பதாக தெரிவித்தனர்.
இதனை செயல்படுத்துவது தொடர்பாக அக்டோபர் 10 தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை அக்டோபர் 10 தேதி தள்ளிவைத்தார்.