55 election cases filed in mhc

தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 55 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் இந்த வழக்குகளை தாக்கல் செய்யலாம்.

நடந்து முடிந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் எம் எல் ஏ களாக வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 18ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

இரு மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 55 தேர்தல் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதில் முதல்வர் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியில் மூன்று தேர்தல் வழக்குகளும், திருச்சி கிழக்கு தொகுதிக்கு ஒரு தேர்தல் வழக்கும் என நான்கு தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலினுக்கு எதிராக ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், மரிய வில்சன் ஆகியோருக்கு எதிராகவும் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோரும் தவெக எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த தேர்தல்களை விட இம்முறை அதிகம். 2021 ஆம் ஆண்டில் 13 தேர்தல் வழக்குகளும், 2016 ஆம் ஆண்டு 23 வழக்குகளும், 2011 ஆம் ஆண்டு 12 வழக்குகளும் தாக்கல் செய்யபட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்குகள் எண்ணிடப்பட்ட பின், தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின், அவற்றை விசாரிப்பதற்கான நீதிபதிகள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

…..

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version