வேடசந்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மீது பதிவான வழக்கை ரத்து

தேர்தல் பரப்புரையின் போது ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வேடசந்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மீது பதிவான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டு பொது தேர்தல் நடந்தது. அதில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் காந்திராஜன் போட்டியிட்டார். 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொட்டனம்பட்டி ரயில்வே சந்திப்பு அருகே வாக்காளர்கள் காந்திராஜனுக்கு ஆரத்தி எடுத்ததாகவும் ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தனியார் தொலைக்காட்சியில் ((நியூஸ் ஜெ டி.வி)) செய்தி வெளியிட்டது. இதன் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரியாக வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைச்சாமி என்பவர் எரியோடு காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், காந்திராஜன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மாஜிஸ்திரேட்டி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ., காந்திராஜன் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கில் சுதந்திரமான சாட்சிகள் யாரும் இல்லை. புகார் கொடுத்த வட்டார வளர்ச்சி அதிகாரியின் பறக்கும்படையில் இடம் பெற்ற காவலர்கள், டிரைவர் ஆகியோரை சாட்சிகளாக சேர்த்துள்ளனர். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.முத்து கணேசபாண்டியன் ஆஜராகி, ஓர் ஆண்டு சிறை தண்டனை வழங்க கூடிய வழக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு பின் காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். வழக்கில் சுதந்திரமான சாட்சிகளும் யாரும் இல்லை. தொலைக்காட்சியில் கூறியதின் அடிப்படையில் புகார் அளித்துள்ளார் எனவே, அவர் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டனர்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திண்டுக்கல் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெறாமல், காவல்துறை வழக்கை எந்திரனமாக பதிவு செய்துள்ளனர். அதனால், மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

Call Now ButtonCALL ME