வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஆர்.காமராஜ், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ஆர்.இளங்கோவன் மற்றும் எம்.எல்.ஏ. சத்யா ஆகியோர் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. எம்.பி. ஆர்.கிரிராஜன் தனித்தனியே மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை தள்ளுபடி செய்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு,” வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கான ஆதாரங்கள் உள்ளன என, அமலாக்கத் துறை அதிகாரிகள் திருப்தி அடைய வேண்டும்.
மேலும், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து, ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை தான் முடிவெடுக்க வேண்டும்.