வக்பு (திருத்த) சட்டத்தை முழுவதுமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும் அச்சட்டத்தில் உள்ள சில விதிகளுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

வக்பு சட்டத்துக்கு முழுமையாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: வக்பு (திருத்த) சட்டத்தை முழுவதுமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும் அச்சட்டத்தில் உள்ள சில விதிகளுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, ‘ வக்பு திருத்த சட்டம் முழுமைக்கும் இடைக்கால தடை விதிக்க முகாந்திரம் இல்லை. ஆனால் இந்த சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு நாங்கள் தடை விதித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.

வக்பு வாரியம் உருவாக்க ஒருவர் ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றுபவரா என்பதை தீர்மானிக்க விதிகள் வகுக்கும் வரை இந்த தடை தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளித்தமைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகள் குறித்து தீர்ப்பளிக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், வக்பு வாரியத்தில் மூன்று முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் சேர்க்கப்படக்கூடாது. வக்பு கவுன்சில்களில் மொத்தம் நான்கு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மேல் சேர்க்கப்படக்கூடாது என்ற விதிகள் இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com