முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடைவிதித்தும், முருகன் ஆஜராக விலக்கு அளித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.bjp Adv RCp For dmk manuj

முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடைவிதித்தும், முருகன் ஆஜராக விலக்கு அளித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா என்று பேசியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பியதாக உள்ளதாக முரசொலி அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பின்னர் முருகன் எம்பி ஆனதால் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது .

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 22ஆம் தேதி எல்.முருகன் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அன்றைய தினம் அவர் ஆஜராகாததால் வழக்கு மே 2 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவதூறு வழக்கு குறித்த நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், ஆஜராக விலக்கு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எல். முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வரும் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு வழக்கு விசாரணைக்கு தடைவிதித்தும், எல்.முருகன் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு குறித்து முரசொலி அறக்கட்டளை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...