மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது என்ற அரசாணையை எதிர்த்து தனியால் கல்வி நிறுவனங்கள் சங்கம் வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது என்ற
அரசாணையை எதிர்த்து தனியால் கல்வி நிறுவனங்கள் சங்கம் வழக்கு
ஐகோர்ட்டு நோட்டீஸ்
கல்வி கட்டண பாக்கி உள்ளது என்பதற்காக மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை வ-ழங்க மறுக்கக்கூடாது என்ற அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:&
படையெடுப்பு
கொரோனா ஊரடங்கினால் பலர் வேலை இழந்தனர். இதனால், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளி மற்றும் கல்வி கட்டணம் குறைவாக உள்ள பள்ளிகளில் சேர்த்தனர். இந்தநிலையில் தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை 12&ந்தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், கல்வி கட்டணம் பாக்கி உள்ளது என்பதற்காக மாணவர்களின் கல்வி மாற்றுச்சான்றிதழை வழங்க எந்த ஒரு பள்ளி நிர்வாகமும் மறுக்கக்கூடாது என்று கூறியுள்ளது.
இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதும், மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் மாற்றுச்சான்றிதழை கேட்டு பள்ளிகளுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.
எதிரானது
ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு மாற்றுச்சான்றிதழ்களை வழங்க வேண்டும். கல்விக் கட்டணத்தை உரிய சட்டத்தை பின்பற்றி பள்ளி நிர்வாகம் வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி சிவில் கோர்ட்டில், கல்வி கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள பெற்றோருக்கு எதிராக பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர வேண்டும்.
ஆனால், அனைத்து வகையான பள்ளிகளும் மாற்று சான்றிதழை வழங்க வேண்டும் என்று பொதுவான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
தனியார் அரசு உதவி பெறாத பள்ளிகள், மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை கொண்டு செயல்படுகிறது.
தடை வேண்டும்
அதுபோன்ற பள்ளிகளுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.எம்.விஜயன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
……………….

You may also like...