மாநில அரசு மேல்முறையீடு செய்த திருவான்மியூர் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய விடுதலை தீர்ப்பினை ரத்து செய்து உயர்நீதி மன்றம் தீர்;ப்பு வழங்கியது

மாநில அரசு மேல்முறையீடு செய்த திருவான்மியூர் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய விடுதலை தீர்ப்பினை ரத்து செய்து உயர்நீதி மன்றம் தீர்;ப்பு வழங்கியது

சென்னை உயர்நீதி மன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்திருந்த குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கில் மாநிலத்தின் சார்பில் கூடுதல் அரசு வழக்குரைஞர் திரு.அ.தாமோதரன் அவர்கள் ஆஜராகி விரிவான வாதங்களை முன்வைத்தார்.
வழக்கில் உள்ள கண்ணுற்ற சாட்சிகள், மருத்துவ அறிக்கைகள், தடவியல் சான்றுகள் மற்றும் சட்ட அம்சங்களை விரிவாக எடுத்துரைத்து கீழமை நீதிமன்றம் வழங்கிய விடுதலை தீர்;ப்பில் உள்ள பிழைகளை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அரசு தரப்பின் வாதங்களை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்ற நீதியரசர்கள் மாண்பைமிகு திரு.பி. வேல்முருகன் மற்றும் மாண்பைமிகு திரு எம். ஜோதிராமன் ஆகியோர் கீழமை நீதிமன்றம் வழங்கிய விடுதலை தீர்ப்பை இரத்து செய்து, மாநிலத்தி;ன் மேல்முறையீட்டை அனுமதித்து தீர்ப்பை மாற்றி வழங்கியது.
இந்த தீர்ப்பு குற்றவியல் வழக்குகளில் ஆதாரங்களின் மதிப்பீடு மற்றும் சட்டப்பூர்வமான ஆய்வின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவதாக சட்ட வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com