பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குற்றவாளியாக உள்ள வழக்கில் மறு விசாரணை (Re investigation) நடத்த வேண்டுமென புகழேந்தி அவர்கள் தொடர்ந்த WRIT மனுவில் உயர் நீதிமன்றம் உத்தரவு.
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குற்றவாளியாக உள்ள வழக்கில் மறு விசாரணை (Re investigation) நடத்த வேண்டுமென புகழேந்தி அவர்கள் தொடர்ந்த WRIT மனுவில் உயர் நீதிமன்றம் உத்தரவு.
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கல்லூரி பெண்களுடன் காரில் பயணித்த போது கார் விபத்துக்குள்ளான தாகவும், ஒரு பெண் உயிரிழந்து மற்றவர்கள் காயம்பட்டதாகவும் எனவே அஜாக்கிரதையாகவும் அதிவேகமாக கார் ஓட்டி சென்று விபத்து ஏற்பட்டதாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அவிநாசி நீதித்துறை நடுவர் முன்பு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு மட்டும் தண்டணை விதிக்கப்பட்டு மேல் முறையீடு நிலுவையில் இருந்தது.
வா. புகழேந்தி அவர்கள் குற்ற வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை, அது கொலை என்றும், வழக்கில் காட்டப்பட்ட கார் சம்பவத்தில் ஈடுபட்ட கார் இல்லையென்றும், மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் ஆவணங்களை விசாரணை அதிகாரி முறையாக விசாரித்து வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும், அதிர்ச்சிதரும் செயலாக கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஒரு குழந்தை இறந்ததாக குறிப்பிட்டும் அந்த குழந்தை யார் என்பதோ அல்லது எப்படி இறந்தது என்பது குறித்தோ எந்த காரணமும் விளக்கமும் அளிக்கவில்லை என்றும் எனவே இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென அதிகாரிகளுக்கு மனு கொடுத்து அந்த மனு நிராகரிக்கபட்டது. அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட writ மனுவில் உயர் நீதிமன்ற நீதிபதி G. K. இளந்திரையன் அவர்கள் மனுதாரர் மேல் முறையீடு நிலுவையில் உள்ள திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து Re investigation பரிகாரம் தேடிக்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.