புரட்சி அதிமுக-வின் நிறுவனரும் முதன்மை செயலாளருமான வா. புகழேந்தி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் முதலமைச்சர்

இன்று 15.04.2026 புரட்சி அதிமுக-வின் நிறுவனரும் முதன்மை செயலாளருமான வா. புகழேந்தி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை கொரணா காலத்தில் போயி இருப்பார் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை பால்டாயில் குடித்தவர் எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள் என்றும் அப்பவே போய் இருக்கணும் மேல் லோகத்திற்கு இங்கே இருந்து கொண்டு நம்மளை உயிரை வாங்கிக் கொண்டு இருக்கு என்றும் பலவாறாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் அவதூறாக பேசியது தொடர்பாக எடப்பாடி K. பழனிசாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரணை செய்ய கோரி வழக்கறிஞர் R. திருமூர்த்தி அவர்கள் முறையீடு செய்து உள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com