நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.காசிநாதபாரதி ஆஜராகி, ‘‘மனுதாரர்களை பரம்பரை அறங்காவலர்களாக நியமிக்க கோரும் மனுவை இணை கமிஷனர் பரிசீலிக்காததால், 2025-ம் ஆண்டு கோவில் விழா நடத்தப்படவில்லை.
நாகப்பட்டினம் மாவடடம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பஞ்சநிதிகுளம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்த சீனிவாச தேவர் 1993-ம் ஆண்டும், அண்ணாமலை தேவர் 2003-ம் ஆண்டும் இறந்து விட்டனர்.
சீனிவாச தேவருக்கு 2 மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசிப்பதால், அவர்கள் தங்களது சித்தப்பா மகன் கைலாசத்தை பரம்பரை அறங்காவலராக நியமிக்க தடை இல்லை என்று பிரமாண மனுவை கொடுத்தனர்.
அண்ணாமலை தேவரின் ஒரே மகள் மலர்விழி தன்னை பரம்பரை அறங்காவலராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இவர்களது கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரிசீலிக்கவில்லை. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘பஞ்சநதிகுளம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தனியார் கோவில் இல்லை. ஏற்கனவே பரம்பரை அறங்காவலராக இருந்தவர்களின் வாரிசுகளான மனுதாரர்கள் இருவரும், அறநிலையத்துறை சட்டப்பிரிவு 54-ன்கீழ் தங்களை பரம்பரை அறங்காவலராக நியமிக்க மனு கொடுக்கவில்லை என்று அறநிலையத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, நாகப்பட்டினம் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனரிடம் மனு கொடுத்து மனுதாரர்கள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’’ என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி, கடந்த கடந்த ஆண்டு மே 6-ந்தேதி மனு கொடுத்தும் இணை கமிஷனர் பரிசீலிக்காததால், சென்னை ஐகோர்ட்டில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.காசிநாதபாரதி ஆஜராகி, ‘‘மனுதாரர்களை பரம்பரை அறங்காவலர்களாக நியமிக்க கோரும் மனுவை இணை கமிஷனர் பரிசீலிக்காததால், 2025-ம் ஆண்டு கோவில் விழா நடத்தப்படவில்லை. இதனால் மிகப்பெரிய வேதனையில் கிராமத்தினர் உள்ளனர். இதுவரை இணை கமிஷனர் மனுதாரர்களின் கோரிக்கை பரிசீலிக்காமல் ஏன் உள்ளார்? என்பதும் தெரியவில்லை’’ என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘‘மனுதாரர்களின் கோரிக்கை மனுவை இணை கமிஷனர் பரிசீலித்து, அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு 12 வாரத்துக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.
…………..