நீதிபதி எம்.தண்டபாணி

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் தொகுதி எம்பியுமான நவாஸ் கனி மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வரும் 19 ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சேர்ந்த வக்கீல் பயாஸ் அகமது என்பவர், வக்பு வாரியத் தலைவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ் கனிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘‘வாலாஜா பஜார் மசூதி நிதியை முறைகேடு செய்து விட்டதாக எச்.ஆர்.திப்பு என்பவருக்கு எதிராக உரிய ஆதாரத்துடன் வக்பு வாரியத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி புகார் அளித்தேன். இதுகுறித்து வக்பு வாரியத்தின் சூப்பிரண்டு, இருதரப்பினரிடமும் 2023-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி விசாரணை நடத்தி, அறிக்கையை தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரிடம் சமர்ப்பித்தார். ஆனால், இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்காததால், சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இருதரப்புக்கும் வாய்ப்பு கொடுத்து விசாரணை நடத்தி இறுதி உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்று கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. எனவே, நவாஸ் கனி மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் சுனில்குமார் ராஜேந்திரன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்குள் நவாஸ் கனி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version