கோவை அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் யானை நடமாட்டத்தை தடுக்க விதிகளை மீறி மின்வேலி அமைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கோவை அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் யானை நடமாட்டத்தை தடுக்க
விதிகளை மீறி
மின்வேலி அமைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கோவை எட்டிமடையில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் அமிர்தா விஸ்வ வித்யாபீட நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக நீண்ட மின்சார கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில்,சென்னை உயர்நீதிமன்ற அமைத்த வழக்கறிஞர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு
நேரில் ஆய்வு செய்து
அறிக்கை தக்கல் செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில்,
யானை நடமாட்டத்தை தடுக்கும் விதமாக எந்த செயலும் செய்யக்கூடாது என்று வனத்துறையின் நிபந்தனையை மீறி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமிர்தானந்தமயி கல்வி நிலையத்தை கடந்த செப்டம்பர் 6-ந்தேதி அன்று ஆய்வு செய்ததாகவும், அமிர்தா விஸ்வ வித்யாபீட பல்கலைக்கழகம், வனப்பகுதியை ஒட்டி 3 கிலோ மீட்டருக்கு யானை வராமல் இருக்க அகழி மற்றும் மின்சார வேலி அமைத்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளது.
இந்த பல்கலைக்கழகம் சார்பில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க 3 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு யானைகள் நுழைந்துள்ளன. மின்சார வேலி அமைத்துள்ளதால் யானைகளின் நடமாட்டம் தடுக்கப்பட்டு உள்ளதாவும்,
அமிர்தா விஸ்வ வித்யாபீட பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான நிலத்தில் யானைக்களுக்கு மிகவும் பிடித்த வாழைப்பழங்களை கொண்ட வாழைத் தோப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும்,
இந்த கல்வி நிலையம் கட்டும்போது, யானை நடமாட்டத்தை தடுக்கும் விதமாக எந்த செயலும் செய்யக்கூடாது என்று வனத்துறை நிபந்தனை விதித்துள்ள நிலையில், தற்போது மின்வேலி அமைத்துள்ளது அந்த நிபந்தனையை மீறிய செயல் ஆகும்
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், அந்த மின்வேலியை அகற்ற வேண்டும் என்றும்,
அதுமட்டுமல்ல, வனப்பகுதி எல்லைக்கு மிக அருகில் ஊழியர்களின் குடியிருப்புகளை கல்வி நிறுவனம் கட்டியிருக்கிறது. இதுவும் நிபந்தனையை மீறிய செயல்தான். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை படித்து பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.