திமுக நிர்வாகி அதியமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி இளைஞரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திமுக நிர்வாகி அதியமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பழையப்பேட்டையைச் சேர்ந்த அசேன் அலி, அதியமான் கைது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இருவரின் ஜாமீன் மனுக்களையும் விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், ஜாமீன் கோரி திமுக நிர்வாகி அதியமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.தமிழ் செல்வன், பாதிக்கப்பட்ட நபரின் வாக்குமூலம் இன்னும் பதிவு செய்யப்படவில்லை எனவும் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தாம் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாரக இருப்பதாகவும் கூறினார்.

இதனையடுத்து, விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version