முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வை வரும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பரீசிலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வை வரும் அக்டோபர் 12ம் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த தேர்வை ஒத்தி வைக்க கோரி திருச்சியை சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கல்வியியல், உளவியல் ,மற்றும் பொது அறிவு குறித்து புதிய பாடத்திட்டங்கள் கூடுதலாக இணைத்து பழைய பாடத்திட்டத்தை மாற்றி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

புதிய பாடத்திட்டத்திற்கேற்ப போட்டி தேர்வுக்கு தயாராக ஆசிரியர் போட்டித் தேர்வை 3 வாரத்துக்கு ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய பரீசிலனை செய்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version