அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியின் வேட்புமனுவில் முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வருமான
அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியின் வேட்புமனுவில் முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி போட்டியிடும் குமாரபாளையம் தொகுதி வாக்காளர் உதயகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில், 2021 சட்டமன்ற தேர்தலின்போது தங்கமணி மற்றும் அவரது மனைவியின் சொத்து, வருமானம், கடன்கள் ஆகியவற்றின் விவரங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருந்தாலும், தற்போது தாக்கல் செய்துள்ள விவரங்களை பார்க்கும்போது, அது அதிகளவில் உள்ளது; 2021 ல் கடன்களும், பொறுப்புகளும் இருப்பதாக தெரிவித்த நிலையில், தற்போது தாக்கல் செய்த ஆவணங்களில் பொறுப்புகள் இல்லாததாகவோ அல்லது வெளிப்படுத்துவதில் முரண்பாடு இருப்பதாகவோ தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.
வருமானம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வங்கி வைப்புத்தொகைகள், வாகனங்கள் மற்றும் பொறுப்புகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் முரண்பாடாக இருப்பதுடன், மதிப்பீடு செய்ததில் தீவிரமான குறைபாடுகள் உள்ளன என குறிப்பிட்டுள்ள மனுதாரர், தங்கமணி வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களில் உண்மை தகவல் மறைக்கப்பட்டதா என்பது குறித்து வருமான வரித்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, தேர்தலுக்கு முன்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.