தமிழ்நாடு சமரச மற்றும் இணக்கமுறை மையம் மற்றும் மாவட்ட சமரச மையம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நாடு தழுவிய அளவில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீர்வு

Ψசெய்திக் குறிப்பு
தமிழ்நாடு சமரச மற்றும் இணக்கமுறை மையம் மற்றும் மாவட்ட சமரச மையம்
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
நாடு தழுவிய அளவில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீர்வு காண்பதற்காக, 2025, ஜூலை 1 ஆம் தேதி முதல் 2025, செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான \தேசத்திற்கான சமரசம்| பிரச்சாரம்.
• உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் வட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணும் நோக்கில், \தேசத்திற்கான சமரசம்| என்ற தலைப்பின்கீழ், 90-நாட்கள் நாடு தழுவிய பிரச்சாரம், 2025, ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 2025, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது .
• மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் திரு. பி.ஆர். கவாய் மற்றும் மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு. சூர்ய காந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் கருத்தாக்கம் செய்யப்பட்ட இம்முயற்சி, தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு (NALSA) மற்றும் சமரசம் மற்றும் இணக்கமுறைத் திட்டக்குழு (MCPC) ஆகியவற்றால் கூட்டாக வழி நடத்தப்படுகிறது.
• மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசரின் உத்தரவுகளுக்கு இணங்க, இந்த பிரச்சாரம் குறித்து, மாண்புமிகு மெட்ராஸ் உயர் நீதிமன்றத் தலைமை நீதியரசர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு சமரச மற்றும் இணக்கமுறைக் குழுவில் முன்வைக்கப்பட்டதில், அடுத்த, 90 நாட்கள் இப்பிரச்சாரத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதற்காக, மிகுந்த முனைப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
• வழக்கு தொடுத்துள்ள பொதுமக்களிடையே இந்தப் பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு சமரசம் மற்றும் இணக்கமுறை மையம், மாவட்ட சமரச மையத்துடன் இணைந்து 14.07.2025 (திங்கட்கிழமை) அன்று காலை 10.45 மணியளவில் உயர் நீதிமன்ற வளாகத்தில், தமிழ்நாடு சமரச மற்றும் இணக்கமுறைக் குழுவின் இயக்குநர் திரு. கே. பாலசுப்ரமணியன் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. தமிழ்நாடு சமரசம் மற்றும் இணக்கமுறை மையம் மற்றும் மாவட்ட சமரச மையத்தின் சமரசர்கள், பதாகைகள் மற்றும் சமரச விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்று, பொதுமக்கள், வழக்குத் தரப்பினர்கள் மற்றும் வழக்குரைஞர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். மேலும் இந்தப் பிரச்சாரம் குறித்து விளக்கினர். அதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட சமரச மையங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிலும், சமரச விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்பட்டு, பொதுமக்கள், வழக்குத் தரப்பினர்கள் மற்றும் வழக்குரைஞர்களுக்கு இந்தச் சிறப்பு முன்னெடுப்புத் திட்டம் குறித்து விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
• சமரசம் ஏற்பட வாய்ப்புள்ள வழக்குகளான திருமண வழக்குகள், விபத்து இழப்பீட்டுக் கோருரிமை வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வணிக வழக்குகள், பணி சார்ந்த வழக்குகள், சமரசம் செய்யத்தக்க குற்றவியல் வழக்குகள், நுகர்வோர் வழக்குகள், கடன் மீட்பு வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள், வெளியேற்றுகை வழக்குகள், நிலம் கையகப்படுத்துகை வழக்குகள் மற்றும் பிற பொருத்தமான உரிமையியல் வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் சமரச மையத்திற்கு அனுப்பப்பட்டன.
• உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் வட்ட நீதிமன்றங்கள் தங்களது தரவுத்தளத்திலிருந்து பொருத்தமான வழக்குகளைக் கண்டறிந்து, 2025, ஜூலை 1 முதல் 2025, ஜூலை 31 வரை \தேசத்திற்கான சமரசம்| என்ற சிறப்பு சமரச முன்னெடுப்பின் கீழ் சமரசத்திற்குப் பரிந்துரைத்தல் என்ற தலைப்பின் கீழ் தகுதிவாய்ந்த வழக்குகளைப் பட்டியலிட்டன.
• சமரச செயல்முறைக்கான விருப்பத் தேர்வாக நேரடி முறை அல்லது இணைய முறை அல்லது இரண்டும் சேர்ந்த முறை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இணைய முறை சமரசத்திற்கு வசதி செய்து தருமாறு வட்ட மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டன.
• சமரசத்திற்காக வழக்குகள் பட்டியலிடப்பட்டது குறித்து சமரசர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் வழக்குத் தரப்பினர்கள் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் தெரிவிப்பதற்குத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
• சமரச மற்றும் இணக்கமுறைத் திட்டக்குழுவின் (MCPC) வழிகாட்டுதல்களின்படி, அனைத்து சமரச மையங்களிலிருந்து தீர்வு காணப்பட்ட வழக்குகளின் வாராந்திர அறிக்கைகள் பெறப்பட்டு, தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தின் சமரச மற்றும் இணக்கமுறைத் திட்டக்குழுவிற்கு (MCPC) அனுப்பப்பட்டன. அதன்படி, இறுதித் தரவுகளானது 06.10.2025 அன்று சமரச மற்றும் இணக்கமுறைத் திட்டக்குழுவிற்கு (MCPC) அனுப்பப்பட்டன.
• சிறப்பு சமரச நடவடிக்கை காலத்தின் போது, மொத்தமாக 25,584 வழக்குகள் சமரசத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டன, அவற்றில் 1,361 வழக்குகளில் தரப்பினர்களுக்கிடையே தீர்வு காணப்பட்டன.
• சமசர மையமானது தரப்பினர்களுக்கு இடையேயான வழக்குகளுக்குத் தீர்வு காண்பதில், வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லை எட்டும் மற்றொரு இயக்கமாகும்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com