கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பத்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேம நிதி வழங்க உள்ளதாக பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல் ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பத்திற்கு,
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேம நிதி வழங்க உள்ளதாக பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல் ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் வரும் சனிக்கிழமை
( 23 ம்தேதி) இதற்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கிராமங்களில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலா ஏழு லட்சம் ரூபாய் நிதியை வழங்குவதாக குறிப்பிட்ட அவர் இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித

கொரோனா காலகட்டத்தில் ஆன்லைனில் நடைபெற்றுவந்த வழக்கறிஞர் பதிவு தற்போது நேரடியாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை 2300 பேர் வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய வழக்கறிஞர் மீது சட்டத்திற்குட்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமல்ராஜ் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றத்தின் மண்டல ரீதியான கிளைகளை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் வலியுறுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

You may also like...