கூட்டுறவு சங்க தலைவரின் காசோலை கையொப்பமிடும் உரிமையை இரத்து செய்து உத்தரவிட்ட கூட்டுறவு துறையின் ஆணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

[6/17, 16:37] Murugavel Advt Admk: அஇஅதிமுகவை சார்ந்த அரியலூர்-பெரம்பலூர் மத்திய வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரின் காசோலை கையொப்பமிடும் உரிமையை இரத்து செய்து உத்தரவிட்ட கூட்டுறவு துறையின் ஆணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் தலைவர் திரு. அய்யாகண்ணுவிற்கு எதிராக கூட்டுறவுத்துறை வழங்கிய காசோலை கையொப்பமிடும் ரத்து ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் அந்த வழக்கு நீதியரசர் திரு. சரவணன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். எம். பாபு முருகவேல் கூட்டுறவு சட்டம் பிரிவு 84 ன் கீழ் வழங்கப்பட்ட ஆணையானது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்றும் பிரிவு 84 இன் கீழ் உத்தரவு வழங்க கூட்டுறவு துறை இணை பதிவாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கூட்டுறவு இணை ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

தகவலுக்காக,
ஆர்.எம். பாபு முருகவேல்,
கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்,
கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், கழக செய்தி தொடர்பாளர்.
[6/17, 16:39] Sekarreporter: 🙏🏽

You may also like...