கபாலீஸ்வரர் கோயிலுக்கு செலுத்த வேண்டிய ஒன்பது கோடி வாடகை பாக்கிய செலுத்த இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
[17/03, 10:08] sekarreporter1: கபாலீஸ்வரர் கோயிலுக்கு செலுத்த வேண்டிய ஒன்பது கோடி வாடகை பாக்கிய செலுத்த இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி வலி நிவாரணிக்கு பெயர் பெற்ற அம்ருதாஞ்சன் நிறுவனம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான லஸ் சர்ச் சாலையில் உள்ள 14 கிரௌண்ட் நிலத்தை 2018-ம் ஆண்டு வரை தன் வசம் வைத்திருந்ததாகவும், அதற்கு தற்போதுவரை ரூ.9.74 கோடி வாடகை பாக்கி இருப்பதாகவும், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை #சென்னை_உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தலைமை நீதியரசர் சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி மற்றும் நீதியரசர் அருள் முருகன் அடங்கிய அமர்வு அம்ருதாஞ்சன் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்நிறுவனம் 2001-ம் ஆண்டு வரை மாத வாடகையாக வெறும் ரூ.1,400 செலுத்தி வந்ததாகவும் அதன் பிறகு 2001-ம் ஆண்டு முதல் மாத வாடகையை ரூ.3.3 இலட்சமாக உயர்த்திய பிறகு அதை செலுத்தவேயில்லை எனவும், அரசு சிறப்பு வழக்கறிஞர் திரு. அருண் நடராஜன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
[17/03, 10:08] sekarreporter1: .