உங்களில் ஸ்டாலின் தமிழக அரசு அவசர மனு

உங்களில் ஸ்டாலின் தடையை நீக்க கோரி தமிழக அரசு அவசர மனு

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், விளக்கம் கேட்டும், தமிழக அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா அமர் வில், நேற்று பிற்பகலில் முறையீடு செய்த னர். ‘விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய் தால், வரும் 4ம் தேதி விசாரிக்கப்படும்’ என, தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனு விபரம்:

மாநில முதல்வர், அரசியல் சாசன அதிகாரி என்பதால், அரசியல் ஆளுமை என்று கருத முடியாது. முன்னாள் முதல்வர்களின் புகைப் படங்களை பயன்படுத்த, உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. மாநிலம் முழுதும் ஒவ் வொரு மாவட்டத்திலும், இன்று துவங்க உள்ள, ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், ஜூன் மாதமே அறிவிக்கப்பட்டது. திட்டத்தை செயல் படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

திட்டம் தொடர்பாக, துண்டு பிரசுரங்கள் மற் றும் ஆவணங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு மாநிலம் முழுதும் வினியோகிக்கப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, புதிதாக ஆவ ணங்களை அச்சிட, மேலும் பல வாரமாகும் என் பதால், திட்டம் ஸ்தம்பித்து விடும். ஜூன் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த நடவடிக்கை களுக்கு திடீரென்று தடை விதித்தால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

எனவே, ஏற்கனவே அறிவித்த இரண்டு திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில், உயர் நீதிமன்ற உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். இந்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, தற்போது துவங்கப்படும் திட்டங்களை, அதே பெயரில் அமல்படுத்த அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, வரும் திங்கள்

கிழமை

விசாரணைக்கு வரவுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version