Madras high court october 14: th day orders

[13/10, 14:03] Sekarreporter1: விதிகளுக்கு உட்பட்டு உரிய தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுவதால், நுகர்வோருக்கு ஆரோக்கிய கேடுகள் ஏற்படுவதாக கூறி, தமிழகத்தில் ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி விற்பனைக்கு தடை விதித்து 2016 ஜனவரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தாத அதிகாரிகள், ஈரப்பதத்துடன் கூடிய மரவள்ளி கிழங்கு மாவை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகவும், அதனால் ஈரமான கிழங்கு மாவை கொண்டு செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஈரப்பதத்துடன் கூடிய ரசாயனம் கலக்கப்பட்ட ஜவ்வரிசி சந்தைகளில் விற்கப்படுவதாகவும், தடை உத்தரவை அமல்படுத்தும் வகையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடைகளில் விற்கப்படும் ஜவ்வரிசியின் மூன்று மாதிரிகளை வரவழைத்து, அவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மூன்று மாதிரிகளை ஆய்வு செய்து அளிக்கப்பட்ட அறிக்கையில், இரு மாதிரிகள் தரமானதாக இருப்பதாகவும், ஒரே ஒரு மாதிரி மட்டும் சற்று வித்தியாசம் உள்ளதாகவும், அதுவும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும், விதிகளுக்கு உட்பட்டு உரிய தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுசம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் பல சுற்றறிக்கைகள் பிறப்பித்துள்ளதாகவும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் உறுதி தெரிவித்தார்.

அரசின் இந்த பதிலை பதிவு செய்த நீதிபதி, தடையை மீறி ஈரமான ஜவ்வரிசி விற்கப்படுவதாக இருந்தால், அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தார்.
[13/10, 14:04] Sekarreporter1: பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை உறுதி செய்ய கோரிய விசாரணை நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு வழக்கு

விசாரணை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார்.

தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் அபிராமபுரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலத்தை சுப்பையாவும், பொன்னுச்சாமியும் உரிமை கோரி வந்த நிலையில் அந்த நிலம் டாக்டர் சுப்பையாவுக்கு சாதகமாக கீழ் நீதிமன்றத்தில் தீர்ப்பாகியுள்ளது.

இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக இருந்து வந்த முன்பகை காரணமாக டாக்டர் சுப்பையா படுகொலை செய்யப்பட்டதும். இதற்கு அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், வழக்கறிஞரான மகன் பாசில், என்ஜினீயரான மகன் போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ருவர் ஆகிவிட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் ஜூலை 28 ம் தேதி முடிவடைந்த நிலையில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி அளித்த தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட ஐய்யப்பன் தவிர மற்ற 9 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகள்
பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில்,
என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு கொலை மற்றும் கூட்டுசதி பிரிவுகளில் இரட்டை தூக்கு தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்
விதிப்பதாகவும் இதனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்
தீர்ப்பளித்தார்.

இந்நிலையில்
பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பான விபரங்களை அனுப்பிவைத்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ், மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கு விசாரணை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[13/10, 14:04] Sekarreporter1: மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன டெண்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் துவங்க முடியாது என முன்னாள் அமைச்சர் வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐ.பி.எஸ். அதிகாரி பொன்னி தலைமையில் குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 129 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி 1132 ஆவணங்களை ஆராய்ந்து தாக்கல் செய்த அறிக்கையில் வழக்குபதிவு செய்ய ஆரம்பகட்ட முகாந்திரம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் அரசும் வழக்கை கைவிட முடிவு செய்திருந்தது

ஆனால் ,ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்,அதில்

முகாந்திரம் இல்லை எனக்கூறி அரசால் கைவிட முடிவெடுக்கப்பட்ட வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு விட்டதால் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனவும், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்

அந்த மனுவில், நாளிதழில் விளம்பரம் வெளியிடுவதில் தொடங்கி
மாநகராட்சி டெண்டர்கள் முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையோடு ஒளிவுமறைவற்ற முறையில் விதிகளுக்கு உட்பட்டு தான் வழங்கப்பட்டதாகவும், டெண்டர் ஒதுக்கீட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அறப்போர் இயக்கம்
தன்னுடைய அரசியல் விரோதிகளுக்கும், டெண்டர் கிடைக்காதவர்களுக்கும் நிழலாக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், தனது பெயரையும் தான் சார்ந்துள்ள கட்சியின் பெயரையும் களங்கப்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்துள்ள வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையையும் சேர்த்தக் கொள்ள வேண்டுமென கோரியுள்ளார்

மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன விசாரணையை மீண்டும் துவங்க முடியாது எனவும், தற்போது தான் அமைச்சராக இல்லாத நிலையில் வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் அக்டோபர் 20ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 

 

[12/10, 13:56] Sekarreporter1: https://youtu.be/Fh2W40GbKFM
[12/10, 15:28] Sekarreporter1: https://youtu.be/ITVLggUFCqo
[12/10, 15:29] Sekarreporter1: https://youtu.be/Fh2W40GbKFM
[12/10, 15:29] Sekarreporter1: https://youtu.be/ITVLggUFCqo
[12/10, 18:26] Sekarreporter1: https://youtu.be/PuJrTGvZVFw
[12/10, 19:47] Sekarreporter1: https://youtu.be/BgUi7gy52Bo
[13/10, 12:10] Sekarreporter1: https://youtu.be/aLcW3kq1OZg
[13/10, 19:44] Sekarreporter1: https://youtu.be/FnBqBT7ogsA
[13/10, 19:44] Sekarreporter1: https://youtu.be/B8NUmX6my8M
[13/10, 19:46] Sekarreporter1: https://youtu.be/FnBqBT7ogsA
[13/10, 21:23] Sekarreporter1: https://youtu.be/NIzSR4VaeZU

 

 

You may also like...