அனைத்து அரசியல் கட்சி கொடிகளை பொது இடத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்* *சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு*

*அனைத்து அரசியல் கட்சி கொடிகளை பொது இடத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்*
*சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு*

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த பொறுப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி கட்சிக் கொடியை பொது இடத்தில் நிறுவுவதற்கு அவர் கொடுத்த விண்ணப்பத்தினை அரசாங்கம் பரிசீலனை செய்து அனுமதி வழங்க உத்தரவிடுமாறு கோரி வழக்கு தொடுத்திருந்தார். இதை விசாரித்த தனிநீதிபதி இளந்திரயன் எந்த ஒரு அரசியல் கட்சியும் பொது இடத்தில் தங்களது கட்சி கொடியை நிறுவ அனுமதி வழங்கக் கூடாது என்றும், மேலும் தமிழகத்தில் உள்ள ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள அனைத்துக் கட்சி கொடிகளையும் பொது இடத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதை எதிர்த்து பல்வேறு கட்சியினர் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் கொண்ட இரு அமர்வு தனி நீதிபதி அளித்த தீர்ப்பை உறுதிசெய்து மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இரு நீதிபதிகளின் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி மற்றும்.விஜய் பிஷ்வால் அமர்வு, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தனி நீதிபதி மற்றும் இரு அமர்வு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவும் சரி என்றும், எந்த ஒரு அரசியல் கட்சியும் பொது இடத்தில் கட்சி கொடியை நிறுவக்கூடாது என்றும், அரசிற்கு சொந்தமான எந்த நிலமும் அரசியல் கட்சியின் உபயோகத்திற்காக பயன்படுத்தக் கூடாது, சென்னை உயர் நீதிமன்றம்.பிறப்பித்த உத்தரவு சரியானது, மேலும் நான் ஆந்திராவில் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது இதே போன்று உத்தரவு பிறப்பித்துள்ளேன், அதனை உச்ச நீதிமன்றமும்.உறுதி செய்துள்ளது என மூத்த நீதிபதி ஜே.கே மகேஸ்வரி கருத்து தெரிவித்து மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி மற்றும் விஜய் பிஷ்னால் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்து உத்திரவிட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version