அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் வேட்புமனுவில் முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் போட்டியிடும் சென்னை ராயபுரம் தொகுதி வாக்களரான பிரவீன் குமார் தாக்கல் செய்துள்ள வழக்கில், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது அசையும் சொத்துக்கள் 39 லட்சத்து 14 ஆயிரத்து 557 ரூபாய் என குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது 70 லட்சத்து 73 ஆயிரத்து 303 ஆக உயர்ந்துள்ளது; சொத்துக்கள் விற்பனை, பரிமாற்றம், அடமானம் குறித்த தகவல்களை வெளிப்படுத்தப்படவில்லை; 2021ல் வெளிப்படுத்திய வங்கிக் கணக்குகள், வைப்புத்தொகைகள், பங்குகளில் முதலீடு, காப்பீடுகள், குடிசை மாற்று வாரிய வீடு, மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் பற்றிய விவரங்கள் தற்போது வெளிப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனவே அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களில் உண்மை தகவல் மறைக்கப்பட்டது குறித்து ஏப்ரல் 9ல் அளித்த புகார் மீது வருமான வரித்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, தேர்தலுக்கு முன்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.