வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறும் பா.ம.க பொதுக்குழு கூட்டம் கட்சியின் சட்ட விதிகளின் படி தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் கூட்டியுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.

சென்னை பாரி முனையில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்தித்த பாலு, பா.ம.க பொதுக்குழு ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவை யார் கூட்டுகிறார்கள் என்ற எந்த விளக்கம் இல்லை. பொதுக் குழு அறிவிப்பில் யாரும் கையெழுத்திட்டவில்லை.

ஆனால் வரும் ஒன்பதாம் தேதி நடைபெறும் பா.ம.கவின் பொதுக்குழுவை தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் இருவரும் இணைத்து கூட்டியுள்ளனர்.
கட்சியினுடைய விதி அதன் படி 7 நாட்களுக்கு முன்பு பொதுக் குழுவை கூட்டி அறிவிப்பு வெளியீட்டால் போதும். பொது குழுவை கூட்ட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.

அதன்படியே கூட்டப்பட்டு இருக்கிறார்கள் இந்த கூட்டத்திற்கு நிறுவனருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பது மட்டுமே கட்சி விதி என தெரிவித்திருக்கிறார் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவங்களுக்கான தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் தேர்தல் ஆணையம் சின்னங்களை அங்கீகரித்து தலைவர் என்ற முறையில் அன்புமணிக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்

மருத்துவர் ராமதாஸ் பா.ம.க நிறுவனர் அவர் பொதுக்குழு அவர் வழிகாட்டுதல் படி நடைபெறும் ஆனால் தீர்மானம் அனைத்தும் ஏற்கவும், நிராகரிக்கவும் பொதுக்குழுவிற்கு மட்டும அதிகாரம் உள்ளது. கட்சியின் விதியின் படி பொதுக்குழு மட்டுமே அனைத்து அதிகாரம் பெற்ற உச்ச அமைப்பு என கே.பாலு தெரிவித்தார்.

கட்சி தொடங்கிய காலம் முதல் தற்போது வரை பா.ம.க தலைமை அலுவலகம் சென்னையில் மட்டுமே உள்ளது. தைலாபுரம் உள்ளிட்ட வேறு எங்கும் இல்லை என கூறினார். அன்புமணி ராமதாஸ் தான் பா.ம.க தலைவர் எனவும் அவரை பொதுக்குழு தான் தேர்வு செய்தது. அவரின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு உள்ளது என தெரிவித்தார்.
அன்புமணி பா.ம.க தலைவர் ஆன பின்பு நடைபெற்ற அனைத்து தேர்தலில் கட்சி போட்டியிடும் வேட்பாளர்களை அங்கீகரத்து வேட்பு மனுவில் அன்புமணி ராமதாஸ் மட்டுமே கையொப்பம் இட்டுள்ளார் என கூறினார்.

கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின் தைலாபுரம் இல்லத்தில்
ஒட்டுக்கேட்டு கருவி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார். அப்போது தான் உண்மை வெளி வரும் என தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பா.ம.கவுற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் அன்புமணிக்கு கடிதம் அன்பியுள்ளது என தெரிவித்தார்.

அன்புமணியின் நடைமயணம் மூலம் தி.மு.க அஞ்சுகிறது. கட்சியன் கௌரவ தலைவர் ஜி.கே.மணி முன்பு பா.ம.க தலைவர் நடைபயணம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசியபோது அதனை மணி கேட்டு ரசித்தது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது என கே.பாலு தெரிவித்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version