உடைந்த காலம்…. நட்பு உடைந்து முகநூலானது… சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது… வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது… உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது…

உடைந்த காலம்….

நட்பு உடைந்து முகநூலானது…
சுற்றம் உடைந்து
வாட்சப் ஆனது…
வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது…
உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது…

குளக்கரை உடைந்து குளியலறை ஆனது…
நெற்களம் உடைந்து கட்டடமானது…
காலநிலை உடைந்து வெப்பமயமானது…
வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது…

துணிப்பை உடைந்து நெகிழியானது…
அங்காடி உடைந்து அமேசான் ஆனது…
விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது…
ஒத்தையடி உடைந்து எட்டுவழியானது…

கடிதம் உடைந்து இமெயிலானது…
விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது…
பல்பம் உடைந்து பால்பாயின்ட் ஆனது…
புத்தகம் உடைந்து
இ-புக் ஆனது…

சோறு உடைந்து ‘ஓட்ஸ்’சாய்ப் போனது..
இட்லி உடைந்து
பர்கர் ஆனது…
தோசை உடைந்து பிட்சாவானது…
குடிநீர் உடைந்து
குப்பியில் ஆனது…

பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது…
வெற்றிலை உடைந்து பீடாவானது…
தொலைபேசி உடைந்து கைபேசியானது…
வங்கி உடைந்து
பே டி எம் ஆனது…

நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது…
புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது…
மார்க்கம் உடைந்து மதவெறியானது…
அரசியல் உடைந்து அருவெறுப்பானது…

பொதுநலம் உடைந்து சுயநலமானது…
பொறுமை உடைந்து அவசரமானது…
ஊடல் உடைந்து விவாகரத்தானது…
காதல் உடைந்து
காமமாய்ப் போனது…

நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால்…
உடைவது உலகினில் நிரந்தரமானது…
தீயவை உடைத்து நீ தீங்கறச் செய்திடில்…
அல்லவை உடைந்திங்கு நல்லவை வாழுமே..

படித்ததில் பிடித்தது..

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com