T. G. V. Ramani Gopal. Recently, the Additional District Consumer Disputes Redressal Commission, Chennai (North) passed an order in a medical negligence case handled by me, awarding compensation of ₹1 Crore to the complainant against three doctors based in Chennai.
[29/06, 19:55] ADV. T.G.V. RAMANIGOPAL: Good evening, Mr. Sekar,
This is Adv. T. G. V. Ramani Gopal.
Recently, the Additional District Consumer Disputes Redressal Commission, Chennai (North) passed an order in a medical negligence case handled by me, awarding compensation of ₹1 Crore to the complainant against three doctors based in Chennai.
This case may be useful for young aspiring advocates and the public to understand important aspects of medical negligence jurisprudence. I would therefore request you to kindly consider publishing this judgment on your esteemed website to create greater legal awareness.
I would be happy to share the order copy and any additional details required. Please feel free to contact me at
Thank you for your time and consideration.
Regards,
Adv. T. G. V. Ramani Gopal
Mobile:
[30/06, 07:07] sekarreporter1: மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவுக்காக சிகிச்சை பெற்றபோது அளிக்கப்பட்ட ஊசி காரணமாக கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளான தண்டையார் பேட்டையை சேர்ந்த பிரம்மானந்த் என்பவர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் சரஸ்வதி தில்லிராஜிடம் சிகிச்சைக்கு சென்ற போது, ஊசி மூலம் மருத்து செலுத்தியதாகவும், சிகிச்சைக்கு பின் ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டு உடல் அரிப்பு,உட்கார முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து தண்டார்பேட்டையில் உள்ள கே கே மருத்துவமனை மருத்துவர் குணசேகர், ஸ்ரீ மருத்துவமனை மருத்துவர் பார்த்திபன் ஆகியோரும் தவறான சிகிச்சை அளித்ததால் ஊசி போட்ட இடத்தில் இருந்த தசைகள் அழுகி உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் உரிய இழப்பீடு பெற்று தரக் கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாய உறுப்பினர்கள், சதிஷ்குமார், வினோத் குமார், அமலா அமர்வு, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடாகவும், வழக்கு செலவாக 30 ஆயிரம் ரூபாயையும் மருத்துவர்கள் சரஸ்வதி தில்லிராஜ், குணசேகர், பார்த்திபன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் 9% வட்டியுடன் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது