State pp ginna letter to dgp

சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளதால்,
தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வலியுறுத்தியுள்ளார்…

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை ஆஜர்படுத்துவதற்கான செயல்முறையைத் தவிர வேறில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு பிரிவு 7 உட்பிரிவு 2 ன் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை பிறப்பித்த நீதிமன்றங்களின் மாஜிஸ்திரேட்டால் செயல்படுத்தப்படும் வரை அல்லது அதை ரத்து செய்யும் வரை நடைமுறையில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் .

குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் போது,சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை , மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள ஏராளமான ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்..

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகளை முறையாக நிறைவேற்றுவதில் காவல்துறையின் முறையாக செயல்படவில்லை என்றும், மெத்தனப் போக்காக உள்ளதாக வேதனை வெளிப்படுத்தியுள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் எத்தனை நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத்துறைக்கு பி.வேல்முருகன் உத்தரவிட்டுள்ளதோடு, அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள், மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிபதிகள், உதவி அமர்வு நீதிபதிகள், சிறப்பு அமர்வு நீதிபதிகள் ,மாஜிஸ்திரேட்டுகள் என அந்தந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே
இது தொடர்பாக, கடந்த 06.01.2023 தேதியிட்ட உத்தரவின்படி, மேற்கு மண்டலம் ஐஜி , சம்பந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடமிருந்து அனைத்து விவரங்களையும் பெற்று, சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஒப்பிட்டு பார்த்து விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா தெரிவித்துள்ளார்.

இதேபோல்,
அனைத்து மாவட்டங்களிலும்
குற்றவியல் வழக்குகள் மட்டுமல்லாமல், மற்ற எல்லா வழக்குகளிலும்
கீழ் நீதிமன்றங்கள் , மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்கள்களில் நிலுவையில் உள்ள வாரண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் குறித்த விரிவான அறிக்கை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும்
அனைத்து காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து உடனடியாக நிலுவையிலுள்ள அனைத்து வாரண்ட்டுகளை நிறைவேற்ற அறிவுறுத்த வேண்டும் என அக்கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்…

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version