Sekarreporter whatsapp news madras high court orders devember22

[12/22, 07:14] Sekarreporter 1: [12/21, 12:20] Sekarreporter 1: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த புகார் தொடர்பான விசாகா குழு விசாரணையை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிராக, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி விசாரணை நடத்த,  கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய  விசாகா குழு அமைக்கப்பட்டது.

விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்து, அது பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்களை கூட தனக்கு வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்

தற்போதைய விசாகா குழுவை கலைத்துவிட்டு, முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணையில் உள்ளது. விசாகா குழு விசாரணை அறிக்கையும், முடிவுகளும் மூடி முத்திரையிட்ட உறையில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாகா குழு, தீர்ப்பாய அந்தஸ்தில் உள்ளதால், அதை எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

மனுதாரர், விசாகா குழு மீது குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாக கூறி, அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். துறை ரீதியான நடவடிக்கையை தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டுமென்ற உத்தரவை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[12/21, 14:52] Sekarreporter 1: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், திமுக எம்.எல்.ஏ. உதயநிதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 3 மாதங்களாக எதிர்மனுதாரர் தரப்பில் இன்னும் வாதங்களை முன்வைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அடுத்த விசாரணையின்போது வாதங்களை தொடங்காவிட்டால், மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு எதிரான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, அவரது வேட்புமனு ஏற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், தொகுதி தேர்தல் அலுவலர், எம்.எல்.ஏ. உதயநிதி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பல்வேறு தேர்தல் வழக்குகளில், எதிர்மனுதாரராக சேர்க்கபட்டுள்ள அந்தந்த தேர்தல் அலுவலர்களை எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க கோரிய மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[12/21, 16:12] Sekarreporter 1: காணொளி காட்சி விசாரணையின்
போது பெண்ணிடம் சிற்றின்பத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது

கொரோனா தொற்று ஆரம்பித்த போது நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடி மற்றும் காணொளி காட்சி விசாரணை என கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் உள்ளது

சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்கையில்,
கேமரா ஆனில் இருந்தது தெரியாமல்
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர்
பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சகா வழக்கறிஞர்கள் மட்டும் நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான
வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது

இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட
வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்

இது போன்ற சம்பவங்களை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என தெரிவித்துள்ள நீதிபதிகள்,
சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு சூ மோட்டோ வழக்கின் விசாரணையை வரும் 23 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது
[12/21, 17:47] Sekarreporter 1: காவல் துறையினரால் மானபங்கம் செய்யப்பட்டு, அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் உள்பட 15 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த டி.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த காசி என்பவரை, கடந்த 2011 நவம்பரில் திருக்கோவிலூர் காவல் நிலையத்தினர் அழைத்துச் சென்றனர்.

பின்னர் இரவு 8 மணிக்கு, அவரது மனைவி லட்சுமி, மாமனார் குமார், சகோதரிகள் ராதிகா, வைதீச்வரி, மைனர் சகோதரர்கள் படையப்பா, மாணிக்கம் என ஆறு பெண்கள் உள்பட 14 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், நான்கு பெண்களை தைலாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, மானபங்கம் செய்ததாக கூறி, திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், ஏட்டு தனசேகரன், காவலர்கள் பக்தவத்சலம், கார்த்திகேயனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி, விழுப்புரம் கூடுதல் எஸ்பி-யிடம் புகார் அளித்துள்ளார்.

இதுசம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், இரவு நேரத்தில் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்க கூடாது என்ற உத்தரவை மீறி, ஆறு பெண்களை காவல் நிலையத்தில் வைத்ததுடன், ஆண் உறுப்பினர்களையும் தாக்கியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க உத்தரவிட்டார்.

மேலும், சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான துறை ரீதியிலான நடவடிக்கையில் மூன்று மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்ட ஆணையம், காவல் துறையினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
[12/21, 17:53] Sekarreporter 1: நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் தரப்பின் விளக்கத்தைக் கேட்டு 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி, நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழிபள்ளம் கிராமத்தில் நடிகர் மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக மறுவகைப்படுத்தி, கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், 2007ஆம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை, கழுவேலி புறம்போக்காக மறுவகைபடுத்தபட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ளது

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த நிலம் தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் நிலத்தை மறுவகைப்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நடிகர் மம்முட்டி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையேற்ற நீதிபதி, அந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக மறுவகைப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், இந்த விவகாரத்தை மீண்டும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, மம்முட்டி தரப்பினரின் விளக்கத்தைக் கேட்டு, 12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டார்.
[12/22, 06:17] Sekarreporter 1: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், திமுக எம்.எல்.ஏ. உதயநிதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 3 மாதங்களாக எதிர்மனுதாரர் தரப்பில் இன்னும் வாதங்களை முன்வைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அடுத்த விசாரணையின்போது வாதங்களை தொடங்காவிட்டால், மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு எதிரான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, அவரது வேட்புமனு ஏற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், தொகுதி தேர்தல் அலுவலர், எம்.எல்.ஏ. உதயநிதி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பல்வேறு தேர்தல் வழக்குகளில், எதிர்மனுதாரராக சேர்க்கபட்டுள்ள அந்தந்த தேர்தல் அலுவலர்களை எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க கோரிய மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[12/22, 07:15] Sekarreporter 1: [12/21, 06:08] Sekarreporter 1: [12/21, 05:59] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1473088191628410881?t=LFopvhkBjHKMOfyk9TTRkA&s=08
[12/21, 05:59] Sekarreporter 1: Sports case justice mahadevan full order. Justice R Mahadevan of Madras HC issues a set of directions to Centre & TN Govt for streamlining policy related to allowing participation of differently abled women athletes in State, national & international events. Holds that athlete Sameeha Barvin was discriminate https://sekarreporter.com/sports-case-justice-mahadevan-full-order-2/
[12/21, 06:08] Sekarreporter 1: [12/21, 06:03] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1473089236760858626?t=LmFB3UP44-3tlr8Gi_XylQ&s=08
[12/21, 06:03] Sekarreporter 1: IN THE SUPREME COURT OF INDIA CIVIL APPELLATE JURISDICTION Civil Appeal  No(s). 7856-7857  of 2021 (Arising out of SLP(C)No(s).10189-10190 of 2019) M/S. APOLLO HOSPITALS ENTERPRISES LIMITED. Arumugasmy. Commission https://sekarreporter.com/in-the-supreme-court-of-india-civil-appellate-jurisdiction-civil-appeal-nos-7856-7857-of-2021-arising-out-of-slpcnos-10189-10190-of-2019-m-s-apollo-hospitals-enterprises-limit/
[12/21, 06:08] Sekarreporter 1: [12/21, 06:02] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1473089027322499075?t=wrsq-vnXZsctL1xAm5jeSg&s=08
[12/21, 06:03] Sekarreporter 1: Mhc SITTING ARRANGEMENTS FOR CHRISTMAS HOLIDAYS 2021 https://sekarreporter.com/mhc-sitting-arrangements-for-christmas-holidays-2021/
[12/21, 06:24] Sekarreporter 1: https://youtu.be/vc8gaJ6VJHI
[12/21, 06:26] Sekarreporter 1: [12/21, 06:24] Sekarreporter 1: https://youtu.be/vc8gaJ6VJHI
[12/21, 06:25] Sekarreporter 1: tn bar council chairman] Amalraj: Book release function chennai #] Amalraj: Justce Karpagavinayagam
[12/21, 07:01] Sekarreporter 1: Sekarreporter Whatsapp news mhc orders december20 https://sekarreporter.com/whatsapp-news/
[12/21, 07:20] Sekarreporter 1: Musings on the Life & Times of Chinnaswamy Subramania Bharathi Narasimhan Vijayaraghavan                              46 https://sekarreporter.com/musings-on-the-life-times-of-chinnaswamy-subramania-bharathi-narasimhan-vijayaraghavan-8/
[12/21, 10:17] Sekarreporter 1: [12/21, 10:16] Sekarreporter 1: https://youtube.com/shorts/viSO6Meq450?feature=share
[12/21, 10:16] Sekarreporter 1: #shorts#தமிழகத்தில் தான் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு sc judge mm sundresh speech
[12/21, 12:18] Sekarreporter 1: [12/21, 12:17] Sekarreporter 1: https://youtu.be/TowFZLuXxt0
[12/21, 12:17] Sekarreporter 1: bjp எல் முருகன் மீது திமுக வழக்கு ஆலந்தூர் பாரதி பேட்டி சென்னை கோர்ட்டில் திமுக வக்கீல்கள் வீடியோ காட்சி
[12/21, 12:40] Sekarreporter 1: https://youtu.be/Gipg6g6PxgY
[12/21, 13:11] Sekarreporter 1: [12/21, 13:09] Sekarreporter 1: [12/21, 13:09] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1473196258328076294?t=MXWQf9bSSclGd-lpoLHm1w&s=08
[12/21, 13:09] Sekarreporter 1: Press The Order dated 20.12.2021 of the Supreme court in the matter of Apollo Hospitals vs. State of TN & Armughaswamy Commission probing the circumstances of the death of the former CM of TN, is a historic win for the hospital. https://sekarreporter.com/the-order-dated-20-12-2021-of-the-supreme-court-in-the-matter-of-apollo-hospitals-vs-state-of-tn-armughaswamy-commission-probing-the-circumstances-of-the-death-of-the-former-cm-of-tn-is-a-historic/
[12/21, 13:09] Maimoona Badsha Daughter Of Habibullah Badsha: 🙏
[12/21, 13:45] Sekarreporter 1: [12/21, 13:44] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1473205046133227520?t=4uGukbvscluXriYDN_Q-Sg&s=08
[12/21, 13:44] Sekarreporter 1: [12/21, 13:41] Adv Suryaprakasam APS: Habibulla batcha one of the finest gentleman who has never exhibited the arrogance of wealth. During the course of hearing in a customs case justice s. Mohan in a lighter vein remarked openly that mr. batcha is rich enough to construct a part of his home with bricks made of gold
[12/21, 13:42] Adv Suryaprakasam APS: God bless ms. Batcha
[12/21, 13:42] Sekarreporter 1: Supr
[12/21, 14:06] Sekarreporter 1: https://youtu.be/ssOwiSVOqu8
[12/21, 16:57] Sekarreporter 1: Chennai advocate suspended tn bar council took action https://sekarreporter.com/chennai-advocate-suspended-tn-bar-council-took-action/
[12/21, 17:29] Sekarreporter 1: https://youtu.be/5ga2kBhdmgE
[12/21, 19:20] Sekarreporter 1: 🙏🏼[12/21, 19:15] Sekarreporter 1: Justice G K Ilanthirayan of Madras High Court directed Commissioner of Land Administration to conduct enquiry and decide whether 40 acres of land belonging to Actor Mammooty at Karuguzhipallam Village, Chengalpet is a Kazuvezhi Poromboke (Govt Land) or Patta Land.

Advocate General R Shunmugasundaram assisted by Yogesh Kannadasan, Special Government Pleader appeared for the Government.
[12/21, 19:15] Sekarreporter 1: ..🙏🏼🙏🏼
[12/21, 19:52] Sekarreporter 1: [12/21, 19:51] Sekarreporter 1: https://youtu.be/qq1y8Md99fU
[12/21, 19:51] Sekarreporter 1: chennai lawyer suspended ஐகோர்ட்டில் பரபரப்பு bar council chairman Amalraj interview
[12/21, 20:29] Sekarreporter 1: Suo Motu Criminal Contempt Petition No.1699 of 2021 P.N. PRAKASH, J. and HEMALATHA, J. A video clipping showing the online Court proceedings of one of our brother Judges, in which, a male is found engaged in eroticism with a lady, is going viral in social media. This Court cannot afford to be a mute spectator and turn a Nelson’s eye when such brazen vulgarity is publicly displayed amidst Court proceedings. https://sekarreporter.com/suo-motu-criminal-contempt-petition-no-1699-of-2021-p-n-prakash-j-and-hemalatha-j-a-video-clipping-showing-the-online-court-proceedings-of-one-of-our-brother-judges-in-which-a-male-is-found/
[12/22, 06:26] Sekarreporter 1: THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN Crl OP(MD)No.18337 of 2021 and Crl MP(MD)No.10063 of 2021 Mathivanan        FIR quahed full order https://sekarreporter.com/the-honourable-mr-justice-g-r-swaminathan-crl-opmdno-18337-of-2021-and-crl-mpmdno-10063-of-2021-mathivanan-fir-quahed-full-order/
[12/22, 06:37] Sekarreporter 1: [12/22, 06:36] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1473459813002657793?t=3s0HMcRaSghwDH0FXD6Wig&s=08
[12/22, 06:36] Sekarreporter 1: Temple land case thiruvathirai Athenam case full order of. THE HONOURABLE MR. JUSTICE R. MAHADEVAN Civil Revision Petition (NPD) (MD) No. 1697 of 2014 and MP (MD) No.2 of 2014. c)If the encroacher(s) fail(s) to remove the encroachment within the given time, then, appropriate action be taken, as per law. https://sekarreporter.com/temple-land-case-thiruvathirai-athenam-case-full-order-of-the-honourable-mr-justice-r-mahadevan-civil-revision-petition-npd-md-no-1697-of-2014-and-mp-md-no-2-of-2014-cif-the-encroac/
[12/22, 07:04] Sekarreporter 1: https://youtu.be/owfJ09rbi5E

You may also like...