Sekarreporter: https://x.com/i/status/2007786380957720650 [04/01, 17:39] Sekarreporter: [04/01, 17:31] Mukesh Reporter: 2003 ஆம் நிதியாண்டிலிருந்து அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய தமிழ்நாடு
[04/01, 17:39] Sekarreporter: https://x.com/i/status/2007786380957720650
[04/01, 17:39] Sekarreporter: [04/01, 17:31] Mukesh Reporter: 2003 ஆம் நிதியாண்டிலிருந்து அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவரும், சென்னை உயர் நீதிபதியாக இருந்து பின்னர், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவிவகித்துபோது ஓய்வுபெற்ற நீதிபதி என்.பால் வசந்தகுமார் பகிர்ந்துள்ள பதிவில், 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
01.04.2003 க்குப் பிறகு சேர்ந்த மற்ற அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்றாலும், 2005 ஆம் ஆண்டு இறுதியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று 2017ல் ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதியாக ஓய்வுபெற்ற தனக்கு ஏன் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்பதை நினைத்துப்பார்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
01.04.2003 க்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டாலும், எம்.எல்.ஏ-வாக அல்லது எம்.பி.-யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதாகவும் நீதிபதி பால் வசந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். தன்னைப் பொறுத்தவரை, வெவ்வேறு விதிகளின் அடிப்படையில் ஒரு பிரிவினருக்கு ஓய்வூதியம் வழங்குவதும், மற்றொரு பிரிவினருக்கு ஓய்வூதியம் வழங்காமல் இருப்பதும் பாகுபாடு காட்டப்படுகிறது என்றே தெரிவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் தங்கள் கடந்த கால, நேர்மையான, அர்ப்பணிப்புள்ள பணிக்காக வெகுமதி அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு எடுத்துள்ள தற்போதைய முடிவு உண்மையிலேயே ஒரு நலத்திட்ட நடவடிக்கையாகும் என்றும் நீதிபதி பால் வசந்தகுமார் தனது பதிவை நிறைவுசெய்துள்ளார்.
அரசின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக எம்.பி.-யும் வழக்கறிஞருமான ஐ.எஸ்.இன்பதுரை, ஓய்வுபெறும்போது பைசா பிடித்தமின்றி கை நிறைய தந்து அனுப்புவது தான் பழைய ஓய்வூதிய திட்டம் என்றும், ஊதியத்தில் பிடித்த பணத்தை குறைந்த வட்டியுடன் திருப்பித்தந்து கைகழுவி அனுப்புவதுதான் புதிய திட்டம் என பதிவிட்டுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் வருமென வாக்குறிதி கொடுத்து, வாக்குகளை அள்ளி ஆட்சிக்குவந்த பின்னர் வட்டியை மட்டுமே கொடுப்பதாகவும் அதிருப்தியை பதிவுசெய்துள்ளார்.
அதேசமயம், மக்கள் பிரதிநிதிகளின் ஓய்வூதியம் குறித்து தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய முன்னாள் ஆணையரான எஸ்.முத்துராஜ் செய்துள்ள பதிவில், தங்கள் சொத்துக்களை எல்லாம் இழந்து அரசின் ரூ. 25000 ஓய்வூதியத்தில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள் உயிர்வாழ்வது தனக்கு தெரியும் என்றும், அதனால் மக்கள் பிரதிநிதிகளை மற்ற அதிகார அமைப்புகளுடன் ஒப்பிடக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை, பிற அதிகாரிகளின் சம்பளத்துடன் அல்லது அவர்களின் கீழ் பணிபுரிபவர்களுடன் ஒப்பிடுவது மக்களின் மனதில் ஜனநாயகத்தின் பலத்தை பலவீனப்படுத்துவதாகவும் முத்துராஜ் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்திய சுதந்திரச் சட்டத்தின் அடிப்படையில் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளிடம் இங்கிலாந்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரத்தை ஒப்படைத்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றும் கூட லட்சக்கணக்கான அரசியல்வாதிகள் உள்ளூர் பிரச்சினைகள் முதல் உலகளாவிய விஷயங்கள் வரையிலான பிரச்சினைகளில் பணியாற்றி போராடி வரும் நிலையில், அவர்களில் சிலர் மட்டுமே எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.-வாக மாறுகிறார்கள் என்றாலும், 75 சதவீத மக்கள் தொடர்ந்து அரசியல்வாதிகளை நம்பி தேர்தல்களில் மீண்டும் மீண்டும் வாக்களிக்கின்றனர் என்றும் கூ கூறியுள்ளார். அரசியல்வாதிகள் இருந்தால் ஜனநாயகம் இருக்கும். என்றும், ஜனநாயகம் இருந்தால் தான் பிற அதிகார அமைப்புகள் செயல்பட முடியும் என்றும் அழுத்தமாக முன்னாள் தகவல் ஆணையர் முத்துராஜ் தன் கருத்தை பதிவுசெய்துள்ளார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், 100+ எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரூ.25000 ஓய்வூதியத்தில் உயிர்வாழ்வது உண்மையாக இருக்கலாம், ஆனால் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களில், 4900 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களில் 17% பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான சொத்துக்களைக் கொண்டுள்ளனர் என்றும், 1.6% பேர் 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான சொத்துக்களைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் நடந்துள்ள 17 பொதுத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 50 ஆயிர்ததை தாண்டியுள்ளது என்கிற நிலையில், ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியிருப்பதாக கூறப்படும் 100 எம்.எல்.ஏ.-க்கள் என்பது சுமார் 0.2 சதவிகித அளவில் மட்டுமே உள்ளதென ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து வெளியீடு கட்டாயமாக்கப்பட்ட 2003ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் பத்து எம்.எல்.ஏ.க்களில் ஒன்பது பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
==================
[04/01, 17:34] Sekarreporter: ok