Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1476489368336756737?t=7gNpglK8EjhP7zZ1WmfuUQ&s=08 [12/30, 15:14] Sekarreporter 1: [12/30, 13:45] Madurai Srinivas Ragavan: நீட் தேர்வும், அதை ரத்து செய்யும் வழியும் —— ஸ்ரீநிவாச ராகவன் S இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 254 பற்றிய முழுமையான புரிதல் இன்றி இந்த விஷயத்தை அணுகுவது குழப்பத்தையே ஏற்படுத்தும்.

[12/30, 15:14] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1476489368336756737?t=7gNpglK8EjhP7zZ1WmfuUQ&s=08
[12/30, 15:14] Sekarreporter 1: [12/30, 13:45] Madurai Srinivas Ragavan: நீட் தேர்வும், அதை ரத்து செய்யும் வழியும்
——
ஸ்ரீநிவாச ராகவன் S

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 254 பற்றிய முழுமையான புரிதல் இன்றி இந்த விஷயத்தை அணுகுவது குழப்பத்தையே ஏற்படுத்தும்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் நடுவண் அரசும், மாநில அரசுகளும் எந்தெந்த பொருட்களில் சட்டம் இயற்றலாம் என்று வரையறுத்துள்ளது.

Union List என்ற பட்டியலில் உள்ள விஷயங்களைப் பொறுத்து நடுவண் அரசு மட்டுமே சட்டங்கள் இயற்ற முடியும். அந்தச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரால் சம்மதம் தரப்பட்டு நடுவண் அரசின் அரசிதழில் அச்சட்டங்கள் பதிப்பிடப்பட்டவுடன் அதில் குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து அச்சட்டங்கள் நாடு முழுவதற்கும் அல்லது அச்சட்டம் குறிப்பிடும் இடங்களுக்கு அமலுக்கு வரும்.

அந்தப் பட்டியலில் உள்ள பொருட்களை/ விஷயங்களைப் பொறுத்து எந்தவொரு மாநில அரசும் எந்வொரு சட்டமும் இயற்ற முடியாது. அப்படி இயற்றினாலும் அச்சட்டங்கள் செல்லாது.

State List என்ற பட்டியலில் உள்ள விஷயங்களைப் பொறுத்து மாநில அரசுகள் மட்டுமே சட்டங்கள் இயற்ற முடியும். அந்தச் சட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஆளுநரால் சம்மதம் தரப்பட்டு அந்த மாநில அரசின் அரசிதழில் அச்சட்டங்கள் பதிப்பிடப்பட்டவுடன் அதில் குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து அச்சட்டங்கள் அந்த மாநிலத்தில் மட்டும் அமலுக்கு வரும்.

அந்தப் பட்டியலில் உள்ள பொருட்களை/ விஷயங்களைப் பொறுத்து நடுவண் அரசு எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. அப்படி இயற்றினாலும் அச்சட்டங்கள் செல்லாது.

Concurrent list என்று மூன்றாவது பொதுப் பட்டியல் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளது. அதில் உள்ள பொருட்கள் / விஷயங்களைப் பொறுத்து நடுவண் அரசும் சட்டம் இயற்றலாம். மாநில அரசுகளும் சட்டம் இயற்றலாம்.

ஒரு வேளை பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு விஷயத்தைப் பொறுத்து நடுவண் அரசும் மாநில அரசுகளும் சட்டம் இயற்றினால் என்ன செய்வது?

இதற்கான விடையை நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 254 வது பிரிவு மூன்று சாத்தியக் கூறுகளாகப் பிரித்து விளக்குகிறது.

பொதுப்பட்டியலில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி நடுவண் அரசும் சட்டம் இயற்றி மாநில அரசும் சட்டம் இயற்றி இரண்டு சட்டங்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டால் நடுவண் அரசு இயற்றிய சட்டமே செல்லும். அதற்கு முரணான மாநில அரசின் சட்டம் செல்லாது.

ஆனால் பொதுப்பட்டியலில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி நடுவண் அரசு இயற்றிய சட்டம் ஒன்று அமலில் இருக்கும் போதே அதே விஷயத்தைப் பொறுத்து ஒரு மாநில அரசு சட்டம் ஒன்றை இயற்றி அந்தச் சட்டத்தை நடுவண் அரசு ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவரின் சம்மதத்திற்கு அனுப்பி அச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் சம்மதம் அளித்தால் மாநில அரசு இயற்றிய சட்டம் தான் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் அமலாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடுவண் அரசின் சட்டத்திற்கு வேலையில்லை.

தமிழ்நாட்டிற்கு மட்டுமே பொருந்தக் கூடிய இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 7A ன் படி தமிழ்நாடு அரசு இயற்றி நடுவண் அரசு ஏற்றுக் கொண்ட சுயமரியாதை/ சீர்திருத்த முறை திருமணங்கள் அனுமதி, இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் மகன்களுக்கு இணையாக மகள்களுக்கு பூர்விகச் சொத்தில் சம பாகம் அளித்து ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் இயற்றிய சட்டடங்கள் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு தமிழ்நாட்டுக்கு அனுமதி ஆகியவை இதற்கான உதாரணங்கள்.

ஆனால் மாநில அரசு பொதுப்பட்டியலில் உள்ள ஒரு விஷயத்திற்கு சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் சம்மதம் கோரி நடுவண் அரசுக்கு அனுப்பினால் அதற்கு நடுவண் அரசு ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி இல்லை.

அப்படியான சட்டங்களை நீதிமன்றம் செல்லாது என உச்ச/ உயர் நீதிமன்றங்கள் அறிவித்த நிகழ்வுகள் உள்ளன.

பொதுப்பட்டியலில் உள்ள ஒரு விஷயத்தைப் பொறுத்து நடுவண் அரசு சட்டம் இயற்றி அது அமலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதே விஷயத்தைப் பொறுத்து மாநில அரசு புதிதாகச் சட்டமொன்றை இயற்றி அதற்கு நடுவண் அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் அனுமதி அளித்து அதன் காரணமாக அந்த மாநிலத்தின் அந்த மாநில அரசின் சட்டம் தான் அமலில் இருந்தாலும் பொதுப்பட்டியலில் உள்ள ஒரு விஷயத்தைப் பொறுத்து அதற்குப் பிறகு நடுவண் அரசு மீண்டும் அதற்கு மாறாக வேறு ஒரு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றால் நடுவண் அரசின் சட்டமே செல்லும்.

மாநில அரசின் சட்டம் உயிரிழந்துவிடும்.

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் நேஷனல் மெடிகல் கமிஷன் சட்டத்தின் சட்டப் பிரிவு 14ஐ யும் நீட் தேர்வுக்கான சட்டப் பிரிவையும் நடுவண் அரசு நாடாளுமன்றத்தின் சட்டம் மூலம் நீக்க வேண்டும்.

அல்லது உச்ச நீதிமன்றம் அச்சட்டத் திருத்தத்தை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும்.

அல்லது தற்போதைய தமிழக அரசு இதற்கு முந்தைய அரசு செய்தது போல நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என ஒரு சட்டம் இயற்றி அதற்கு நடுவண் அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் சம்மதத்திற்கு அனுப்பலாம். அதற்கு குடியரசுத் தலைவர் சம்மதம் தெரிவித்தால் நீட் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது.

ஆனால் வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக பேரமர்வின் முன் இருப்பதாலும் ஏற்கனவே தமிழகத்திற்கு தற்காலிக விலக்கு கோரி தமிழக அரசு சட்டம் இயற்றி அதற்கு சம்மதம் கோரிப் பரிந்துரைக்க நடுவண் அரசு மறுத்துவிட்டதாலும் தமிழ்நாடு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பதை உச்ச நீதிமன்றம் 2017ல் மறுத்துவிட்டதாலும்
தமிழகம் நீட் தேர்விலிருந்து விடுபட அரசாங்க வழியில் வாய்ப்பு எனக்குத் தெரிந்த வரை இல்லை.

அதனால் ஏற்கனவே மறுக்கப்பட்ட விலக்கை மீண்டும் கோருவதற்காக நிபுணர் குழு அமைத்து, அதன் பாதகம் பற்றிய அறிக்கை பெற்று, அதை அடிப்படையாகக் கொண்டு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கோரி, புதிதாகச் சட்டம் இயற்றி அதற்கு நடுவண் அரசு ஒப்புக்கொண்டு குடியரசுத் தலைவரின் சம்மதம் பெறுவதெல்லாம் சாத்தியமில்லை என்பது தெளிவு.

தமிழ்நாட்டுக்கு மட்டும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு என்பதை நடுவண் ( தற்போதைய அல்லது முந்தைய ) அரசோ ஏற்கவில்லை. இடையில் வந்தது தற்காலிக விலக்கு மட்டுமே என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி.

நாடெங்கும் ஒரே முறையில் மாணவர் சேர்க்கை என்ற சட்டத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு மற்றும் விலக்களிக்க உச்சநீதிமன்றமும் தயாராக இல்லை.

ஆக, நீட் தேர்வை நாடு முழுவதற்கும் ரத்து செய்ய ஒரே வழி சட்டத் திருதேதி வாபஸ். அல்லது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு வேண்டும் என்றால் அதற்கான தமிழ்நாட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை நடுவண் அரசு பெற்றுத் தரவேண்டும். அதை உச்ச நீதிமன்றம் செல்லாது எனத் தீர்ப்பளிக்காமல் இருக்க வேண்டும்.

இரண்டில் எது சாத்தியம் என்பதே இந்தக் கேள்விக்கான பதில்.
[12/30, 13:51] Madurai Srinivas Ragavan: Now the Govt of TN states that the new State Act will not come under the concurrent list as it falls with in the ambit of public health that falls under State List only.

But I doubt that imparting education is different from taking care of public health And the National Medical Commission Act is very clear that admission into medical colleges can be done only on the basis of Natonal level entrance Tests.

You may also like...