Rskj bench கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வு அல்ல. For petner Ragavachary seek to quash FiR
கோயில் பெயரில் நன்கொடை வசூலித்த வழக்கில் யூடியூப்பர் கிரிமினல் வழக்குகளுக்கான நீதிமன்றத்தில்தான் நிவாரணம் தேட முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆவடியை சேர்ந்தவர் கார்த்திக் கோபிநாத். இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிகளுக்காக தநது யூடியூப் மூலம் நன்கொடைகள் வழங்குமாறு தெரிவித்தார். இந்த சேனலை பார்த்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 34 லட்சம் வரை நன்கொடை அனுப்பினர். அந்த நன்கொடை பணம் பெங்களூரில் உள்ள ஒரு என்ஜிஓ கணக்கில் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் பெயரில் நன்கொடை வசூலிப்பது மோசடியானது எனக்கூறி கோயில் செயல் அதிகாரி காவல்துறையில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திக் கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து, தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் மீதான விசாரணைக்கு தடை இல்லை. அதே நேரம் நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கார்த்திக் கோபிநாத் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, கோயில் பெயரில் வசூலித்த பணத்தை கோயில் நிர்வாகம் வாங்க மறுக்கிறது. அந்த பணத்தை அவர் தனிப்பட்ட முறையில் வசூலிக்கவில்லை. கோயில் திருப்பணிகளுக்காகத்தான் வசூலித்தார். இதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றார்.
அதற்கு அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், அறநிலையத்துறை சட்டத்தின்படி அனுமதியில்லாமல் கோயில் பெயரில் நன்கொடை வசூலிக்க கூடாது. தற்போது அறநிலையத்துறை சார்பில் அந்த கோயிலுக்கு திருப்பணி முடிந்து கும்பாபிஷேகமும் முடிந்துவிட்டது. அதனால், மனுதாரரின் பணம் தேவையில்லை என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் வழக்கு ரத்து செய்யுமாறு கோருகிறார். இந்த நீதிமன்ற அமர்வு கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு. கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வு அல்ல. அங்குதான் நிவாரணம் பெற முடியும் என்று தெரிவித்து விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.