Registration dept case acj order

லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கிய சார் பதிவாளர் மீதான துறை ரீதியான விசாரணையை விரைந்து முடிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய சார் பதிவாளர் கோபால கிருஷ்ணன், தூத்துக்குடிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். 

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அவர், மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதுசம்பந்தமான உத்தரவை ரத்து செய்யக் கோரி, கருப்பு எழுத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத்பண்டாரி,நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, சம்பந்தப்பட்ட பதிவாளர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதை எதிர்த்து, சார்பதிவாளர் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
சார்பதிவாளர் கோபாலகிருஷ்ணன் மீதான துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...